Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 9, 2016

தென் இந்திய நடிகர் சங்கத்தை முற்றுகையிடும் போராட்டம்...! - கி. வீரலட்சுமி


காவேரி பிரச்சனையில் மவுனமாக இருக்கும் தென் இந்திய நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் நிறுவனர் கி.வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் நிறுவனர் வீரலட்சுமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள் செய்தியில் கூறியிருப்பதாவது,

காவேரி பிரச்சனையில் கன்னட நடிகர்கள் அம்மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இருக்கும் தென் இந்திய நடிகர் சங்கமோ இதுவரை மவுனம் காத்து வருகிறது. கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லை என்று கர்நாடக அரசு பொய் சொல்கிறது. தமிழகத்திற்கு தண்ணீ கொடுக்கக்கூடது என கன்னட நடிகர்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். நீரின்றி வறண்டு கிடக்கும் தமிழகத்திற்கு நீர் வேண்டி தமிழ் திரைப்பட நடிகர் நடிகைகள் போராட முன்வராததை கண்டித்து நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்திற்கு வரும் வெளி மாநில நடிகர் நடிகைகள் நடிக்கின்ற தொழிலை மட்டு பார்த்தால் நாங்கள் ஏன் தென் இந்திய நடிகர் சங்கத்தை முற்றுகையிடப்போகின்றோம். அவர்கள் தேவையில்லாமல் தமிழகத்தில் உள்ள தமிழர்களில் அரசியல் உரிமை, அதிகார உரிமையை தட்டிப்பறிக்கும் செயலில் ஈடுபடுவதாலும், எங்களது பண்பாட்டில் ஈடுபடுவதாலும் தான் நாங்கள் நடிகர் நடிகைகளுக்கு எதிரான போராட்டத்தை முன் வைக்கிறோம். தென் இந்திய நடிகர் சங்கத்தை வருகின்ற ஞாயிற்றுகிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic