Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 5, 2016

ஆக்சிஜனுக்கு பதிலாக சிரிப்பு வாயு கொடுத்த வழக்கில் தீர்ப்பு!


சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவருக்கு ஆக்சிஜன் வாயு கொடுப்பதற்கு பதிலாக சிரிப்பூட்டும் வாயு அளித்த காரணத்தால் பெண் மரணமடைந்த வழக்கில் பெண்னின் கணவருக்கு ரூபாய் 28.37 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ருக்மணி என்ற பெண் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது  ஆக்சிஜன் வாயு அளிப்பதற்கு பதிலாக சிரிக்கை வைக்கும்  வாயு என அழைக்கப்படும் நைட்ரச் ஆக்ஸைடு வாயுவை தவறுதலாக அளிக்கப்பட்டது. இதனால் அந்த பெண் சுய நினைவற்ற கோமா நிலையை அடைந்தார். 

பின்னர் ஒருவருடம் கழித்து 2012 மார்ச் மாதம் 4ஆம் தேதி அந்த பெண் இறந்து போனார். இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் கணேஷ் தனது மனைவியின் மரணத்திற்காகவும், இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் ரூபாய் 50 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு நாங்கு வருடங்களாக இழுவையில் இருந்து வந்தது. தற்போது வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் தமிழ் நாடு சுகாதாரத்துறை பாதிக்கப்பட்ட ருக்மனியின் கணவர் கணேஷிற்கு ரூபாய் 28 லட்சத்தி முப்பத்தி ஏழாயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic