ஈராக்கின் பிரபல் செய்தி சேனல் அல்-சுமாரியா தெரிவித்திருப்பதாவது, ஐ.எஸ் அமைப்பின் தலைவன் மற்றும் அவனோடு மற்ற சில அவ்வமைப்பின் தலைவர்களும் கூட்டணி படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளதாக கூறுகிறது.
ஐ.எஸ் அமைப்பின் முகாம்கள் செயல்பட்டு வருவதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் ஜெட் விமானங்கள் மூலம் கூட்டணிப்படையினர் தாக்குதல் நடத்தினர். சிரியா ஈராக் எல்லையோரம் இருக்கும் நகரமான நினவா என்னும் ஊரிலிருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் ஐ.எஸ் அமைப்பின் முகாம் என கருதப்பட்ட இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் பக்தாதி உட்பட சில தலைவர்களும் காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
ரகசிய கூட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டிருந்த ஐ.எஸ் அமைப்பின் தலைவர்கள் மீது புலனாய்வு அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிரது. ஆனால் கூட்டணிப்படைகளின் அமெரிக்காவைச்சார்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது ஐ.எஸ் தலைவன் இந்த தாக்குதலில் காயம் பட்டிருக்கலாம் என்ற தகவலை உறுதியாக கூற முடியாது. இதற்கு முன்னரும் இதே போன்ற தகவல்கள் வெளிவந்திருக்கிறது. எனவே தற்போது வரை இது தொடர்பாக உறுதியாக எதையும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments