Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 19, 2016

புர்கினி ஆடை தடைக்கு எதிராக பிரான்சில் இளம் பெண் போராட்டம்!


பிரான்சில் புர்க்கினி தடையை எதிர்த்து ஆஸ்திரேலியா நாட்டு இளம் பெண் ஒருவர் போராட்டத்த்கில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் குடியிருந்து வருபவர் ஜெய்னப் அல்ஷெல். பிரான்சில் இஸ்லாமியர்களின் பாரம்பரிய உடையை பொது இடங்களில் உடுத்திச் செல்வதற்கு கடும் எதிர்ப்பு கிளிம்பியுள்ளதில் இவருக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு பிரான்ஸ் வந்த செய்னாப் மற்றும் அவரது குடும்பம் ரிவேரா கடற்கரையில் புர்க்கினி அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அது மட்டுமின்றி புர்க்கினி குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் எனில் என்னிடம் அணுகுங்கள் என்ற பதாகையையும் ஏந்தியபடி தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ஆனால் அங்கிருந்த பொதுமக்களுக்கு இவர்களின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தவே அவர்கள் வாக்குவாதம் செய்ய‌ துவங்கியுள்ளனர். இதில் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிடுவோம் என‌ மிரட்டல் விடுக்கவே அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக‌ கூறப்படுகிறது.

பயங்கரவாதத்திற்கும் புர்க்கினிக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை எனவும் அதுபோலவே பயங்கரவாதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஜெய்னப் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic