Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 22, 2016

ஸ்கைப் அலுவலகத்தை மூடிவிட முடிவு!


மைக்ரோசாப்ட் நிறுவனம் லண்டனில் இயங்கி வரும் தனது ஸ்கைப் அலுவலகத்தை மூட முடிவு செய்துள்ளது. இதனால் 400 ஊழியர்கள் வரை வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில பொறியாளர்களை நீக்கிவிட்டுப் பிற வல்லுநர்களுக்கு வேலையை அதிகரிக்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளதால் உலகளவில் ஸ்கைப் மற்றும் யம்மர் பிரிவுகளில் இருந்து பணியாளர்கள் நீக்கப்படலாம் என்று ஃபினான்ஷியல் டைம்ஸ் கூறியுள்ளது.

லண்டன் அலுவலகம் மூடப்பட்டாலும் ஐரோப்பாவில் ரெட்மாண்ட், பாலோ ஆல்டோ, வான்கூவர் பொன்ற இடங்களில் இயங்கி வரும் பல அலுவகலகங்கள் தொடர்ந்து இயங்கும் என்று கூறப்படிகிறது.

ஸ்கைப் நிறுவனத்தின் முன்னால் ஊழியர்கள் கூறுகையில் மைக்ரோசாப்ட் ஸ்கைப் நிறுவனத்தின் மொத்த நடவடிக்கையையும் தங்களே கவனிக்க தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்கிறது இந்தப் பணி நீக்கத்திற்கு இதுவே காரணம் என்று கூறியுள்ளனர்.

ஸ்கைப் செயலி உலகளவில் மிகவும் பிரபலமான சாட்டிங் செயலியாகும், இதற்குப் பல தரப்பினரிடம் இருந்து போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெஸ்செஞ்சர்கள் போன்ற பல செயலிகள் ஸ்கைப் நிறுவனத்தை விட அதிக பயனர்களுடன் இருக்கின்றன. இருந்தாலும் வணிக ரீதியான வீடியோ சாட்டிங் போன்றவற்றிற்கு ஸ்கைப் செயலியே மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வன்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை பிரிவுகளில் இருந்து மேலும் 2,850 பணியாளர்களை வேலையை விட்டு துரத்தும் முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் வருடாந்திர அமெரிக்க செக்யூரிட்டிஸ் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் கூறியுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic