கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்குமாறு அந்த மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தின் மீது புதன்கிழமை நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. எனினும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தத் தாக்குதலுக்கு கேரளத்தில் ஆளும் கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம் என்றும், கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரனைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலத்தில் அரசியல் வன்முறை அதிகரித்து வருவது குறித்த மத்திய அரசின் கவலையை அவரிடம் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக பினராயி விஜயன் உறுதியளித்தார் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை அளிக்குமாறு கேரள அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் பேசிய சில மணி நேரங்களுக்குள் இவ்வாறு அறிக்கை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments