Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 9, 2016

வட கொரியாவில் அணு ஆயுத சோதனை நடத்தியதால் நில நடுக்கம்!


வடகொரியாவில் 5-வது முறையாக அணு ஆயுத பரிசோதனை நடத்தப்பட்ட பகுதியில் 5.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வடகொரியா பியூங்கி என்னும் இடத்தில் 5-வது முறையாக அணு ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது. இந்த அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட போது அப்பகுதியில் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.

தேசிய பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டத்தை தென்கொரியா கூட்டி உள்ளது. வடகொரியாவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதை அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சீன நில அதிர்வு ஆய்வு கழகங்கள் உறுதி செய்துள்ளன.

வடகொரியா, ஜனவரி மாதத்தில் தனது 4-வது அணுகுண்டு சோதனை நடத்தியது. இதன் காரணமாக ஐ.நா.,வின் கடும் கண்டனத்திற்குள் ஆளானது.

உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்பும் விதமாக அவ்வப்போது வடகொரிய இதுபோன்ற பயங்கர ஆணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. இதன் காரணமாக ஐ.நா வின் கடும் கண்டனத்திற்குள் ஆளானது. இருப்பினும் சில தினங்களுக்கு முன் ஜி20 மாநாடு நடைபெற்றபோது வட கொரியா மூன்று பயங்கர ஏவுகணைகளை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic