Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 9, 2016

அரசியல் ஊடகவியலாளர்களுக்கு ஒரு குறிப்பு!

 

“நான் அரசியல் ஊடகவியலை விட்டு விலகும் இவ்வேளையில், பில் கிளிண்டன் குறித்து செய்தி சேகரிக்க முப்பது வருடங்களுக்கு முன் அர்கன்ஸாஸில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து இன்று வரை பெற்ற அனுபவத்தினால் கற்றவைகள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்” என ரான் ஃபோர்னியர் (அமெரிக்க நிருபர், www.theatlantic.com இணையதளத்தில் எழுதியிருக்கும் கட்டுரையின் மொழியாக்கம் இது:

1. உங்கள் பணிக்கான நோக்கை மறக்காதீர்கள்

ஒரு நிருபரின் வேலை, தனிப்பட்ட பாகுபாடுகளை, பொய்களை கடந்து என்ன நடந்தது? ஏன் முக்கியம்? என்பதை முடிந்த அளவு உண்மைக்கு அருகே சென்று விளக்குவதுதான். ஊடகவியல், அதன் உயர்ந்த நிலையில், நமக்கு வேறு வழியில் தெரிய வாய்ப்பில்லாத செய்திகளை தெரிவிக்கிறது. புதிய எண்ணங்கள், நடவடிக்கைகள் வழியே வெகுசனத்தை தூண்டுகிறது. பயமோ, ஒரு சார்போ இல்லாமல் வலிமையான மக்களை பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளுகிறது.

2. நீங்கள், உங்கள் செய்தி ஆசிரியருக்காக வேலை செய்வதில்லை

நீங்கள், உங்கள் ஆசிரியருக்கோ, உங்கள் துறையில் இருக்கும் பிறருக்காகவோ, நீங்கள் செய்தி பெறும் நபர்களுக்காகவோ வேலை செய்யவில்லை. நீங்கள் பொதுமக்களுக்காக, உங்கள் வாசகர்களுக்காக வேலை செய்கிறீர்கள். அதன் காரணத்தால், நீங்கள் பெயரற்றோரின் மேற்கோள்களையும், சுருக்கெழுத்துக்களையும், உங்கள் துறையில் இருக்கும் பிற மக்களைக் கவர்வதற்காக எழுதக்கூடாது. மேலும், குறிப்பிட்ட தரப்பு மக்களை மகிழ்விக்கவோ அல்லது தவறான கதையையோ ஒளிபரப்பும்போது, நீங்கள் பலிகடா ஆகிறீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

3. உறவுகளை கட்டமையுங்கள்

உறவுகளை கட்டமைப்பதன் வழியே செய்தி ஆதாரங்களை வளர்க்கலாம். உங்கள் வாசகர்களுக்கு என்ன தெரிய வேண்டும் என்பதை அறிந்த, உங்கள் துறையிலேயே இருக்கும் நபர்களின் பெயரை பட்டியலிடுங்கள். ஒவ்வொருவருக்கும் மெயில் அனுப்பி அல்லது அழைத்து அவர்களை தேநீர் அருந்த அழையுங்கள். பெயர் பட்டியல் வைத்துக்கொண்டே இருங்கள். அவர்களை அழைத்துக் கொண்டே இருங்கள். தகவல் திரட்டும்போது, முதன்முறையாக ஒருவரை சந்திக்கிறீர்கள் என்றால், அந்தச் சந்திப்பை இலகுவானதாக மாற்றுங்கள். அவரைப் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள். அவர் எங்கிருந்து வருகிறார்? அவர் குடும்பத்தோடு எப்படி இணைந்திருக்கிறார்? அவருடைய பொழுதுபோக்கு காரியங்கள் என்னென்ன? ஆகியவற்றை தெரிந்துக் கொள்ளுங்கள். முதல் சந்திப்புக்குப் பிறகு, நன்றி குறிப்பு ஒன்று அனுப்புங்கள். தொடர்ந்து சில முறை சந்தியுங்கள். அவ்விடத்தில் ஒரு உறவு தோன்ற வாரங்களோ, மாதங்களோ ஆகலாம். அதுவரை அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருங்கள்.

4. காயப்படுத்த தயங்காதீர்கள்

நீங்கள் மக்களோடு உறவுகளைக் கட்டமைக்க வேண்டிய காரணமே, அவர்கள் உங்கள் பணியை புரிந்துக்கொள்வார்கள் என்பதுதான். அதாவது, உங்களிடம் இருந்து அவர்கள் எந்த உதவியும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு உறவை வளர்ப்பது முக்கியம். எந்த உறவுக்குமே நேர்மை தான் மையமாக இருக்க முடியும். அதனால்தான், ‘நான் உங்கள் முதுகில் குத்த மாட்டேன், நெஞ்சில் தான் குத்துவேன்’ என நான் முன்னரே சொல்லிவிடுவேன். அதாவது, நான் உங்களை பற்றியோ, உங்கள் முதலாளி பற்றியோ தான் எழுதப் போகிறேன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். கட்டுரை எவ்வளவு எதிர்மறையாக இருக்கப் போகிறது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். உங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். இருப்பினும், கத்தியின் கூர்முனையை நீங்கள் சந்திக்க வேண்டியதாகவே இருக்கும். ஒரு நிருபரின் வேலை நண்பர் கூட்டத்தைப் பெருக்குவதல்ல.

5. வலிமையானோருக்கு பலத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்

பலம், ஊடகவியலாளர்களிடம் இருந்து, அவர்கள் யாரை பற்றி எழுதுகிறார்களோ அவர்களிடம் சென்று விடுவது குறித்து நான் பலமுறை எழுதியிருக்கிறேன். கட்டுப்பாட்டை விட்டுக்கொடுப்பதை நிறுத்திவிட்டு, குணமாக்கும் வலிமை நிறைந்த மக்களை உருவாக்கும் காரியங்களை செய்யுங்கள். ஒருவரின் பின்புலம் பற்றி குறிப்பு எழுத விருப்பமில்லையா? எழுந்து நின்று அதைச் சொல்லுங்கள். டோனால்ட் ட்ரம்பின் வருமான வரி விவரங்களை வெளிப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? அவர் அதை செய்யும் வரை அவருடைய இலவச தொலைக்காட்சி மீது தடையாணை விதிக்கக் கோருங்கள். பிரச்சார அதிகாரிகள், உங்கள் சக நிருபர் எழுதிய கட்டுரைக்காக அவரை துன்புறுத்துகிறார்களா? மேலும், நான்கு நிருபர்களை அமர்த்தி அதே கட்டுரையை ஆழமாக எழுதச் செய்யுங்கள். அரசியல் நடவடிக்கையாளர்கள் புதிது புதிதாக இரக்கமற்ற வழிகளை கண்டுபிடித்து பொது மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். ஊடகவியலாளர்களும் பொதுமக்களை சரியாக வழிநடத்த புதிது புதிதாக வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

கட்டுரையாளர்: என ரான் ஃபோர்னியர்
தொடரும்...

தமிழில்: ஸ்னேகா

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic