Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 22, 2016

திமுக வெற்றிபெற்றுவிடும் என்பதால் தான் மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் ரத்து! - ஸ்டாலின்


திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 6000 பேர், வேளச்சேரி பி.மணிமாறன் தலைமையில், அந்த கட்சிகளில் இருந்து விலகி, தங்களை திமுகவில இணைத்துக் கொண்டனர். இதற்கான விழா சென்னை வேளச்சேரியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

முதல் முதலாக நான் மேயர் பொறுப்பேற்ற போது, முதல் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றபோது, அந்த கூட்டத்தில் நான் முதல் உரையாற்ற வேண்டிய நேரத்தில், சட்டமன்றத்தில் கன்னி பேச்சு என்பது போல அங்கு நான் கன்னி பேச்சாக பேச வேண்டும். அதற்காக நான் உரையை தயாரித்தேன். முதல் முறையாக மாநகரக் கூட்டத்தில் பேசுவதில் எனக்கு கொஞ்சம் அச்சம் இருந்தது.

 எனவே எனது பேச்சுக் குறிப்புகளை எடுத்துக் கொண்டு, அது முறையா, சரியா என்பதை அறிந்து கொள்ள தலைவர் கருணாநிதியிடத்தில காண்பித்தேன். தலைவர் அதை படித்துப் பார்த்து விட்டு சிறப்பாக உள்ளது என்று சொல்லி, இரு இடங்களில் திருத்தம் சொன்னார். அது என்னவென்றால், நான் மேயர் பதவி என்று இரு இடங்களில் குறிப்பிட்டு இருந்ததை மாற்றி மேயர் பொறுப்பு என்று எழுதினார். பிறகு என்னிடம், “நான் ஏன் பதவி என்பதை அடித்துவிட்டு பொறுப்பு என்று எழுதினேன் தெரியுமா? மக்கள் உன்னிடத்தில் தந்திருப்பது பதவியல்ல, பொறுப்பு. அந்த பொறுப்பை உணர்ந்து பணியாற்றிட வேண்டும்” என்று அறிவுரை சொன்னார். ஆக, அந்த உணர்வோடு நாம் பணியாற்றி இருக்கிறோம். தொடர்ந்து மா.சுப்பிரமணியனும் பணி ஆற்றியிருக்கிறார் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். இன்றைக்கும் எங்கேயாவது நானும், மா.சுப்பிரமணியனும் சென்றால் எம்.எல்.ஏ., என்பதை மறந்து மேயர் என்று தான் கருதுவார்கள்.

ஆனால், இன்றைக்கு இருக்கின்ற மேயரை பார்த்தால் என்ன நினைப்பு வருகிறது பார்த்தீர்களா? ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. அந்த நினைவுதான் வரும். எதற்காக நான் இதை சொல்கிறேன் என்றால், உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடிய இந்த நேரத்தில், அண்மையில் சட்டமன்றத்தில் அவசர அவசரமாக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து, மாநகராட்சி மேயர் தேர்தல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நிலை இருக்கக் கூடாது, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவசர சட்டம் கொண்டு வந்து சட்ட மன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

 அதனை சட்டமன்றத்தில் நாம் கடுமையாக எதிர்த்தோம். அதோடு நிறுத்தாமல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று, மாநகராட்சி மேயர் மட்டுமல்ல, பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள் எல்லாம் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் அவசர அவசரமாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள்.  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் திமுக பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. எனவே, இந்த தேர்தலை நடத்தினால் அதிமுக வெற்றி பெற வாய்ப்பிருக்காது. திமுகவினர்தான் மீண்டும் மேயர்களாக, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களாக வந்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு வந்திருக்கிறது. ஆகவே, இதற்காக ஒரு திட்டம் தீட்டப்பட்டு, ஒரு சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

 அதுமட்டுமல்ல, இந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளைப் பற்றி அண்மையில் வெளியிடப்பட்டு இருக்கக் கூடிய சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நகராட்சிக்கு என்று மத்திய அரசு ஒதுக்கி இருக்கக்கூடிய மானியத் தொகை 291 கோடி ரூபாய், செலவு செய்யப்படாமல் அப்படியே திருப்பி அனுப்பியுள்ளது. மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியத் தொகை 200 கோடி ரூபாயும், இன்றைக்கு இருக்கக் கூடிய ஜெயலலிதா அரசு திருப்பி மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறது.தொலை நோக்கு திட்டங்களுக்கு ஒதுக்கிய ஆரம்ப கட்ட நிதிகள் செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது என்றால் இதைவிட கேவலம் இந்த ஆட்சிக்கு வேறில்லை.அதுமட்டுமல்ல இன்றைக்கு மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகங்களில் 63 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஆக, இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியவர் யார் என்றால் மேயராக இருக்கக் கூடியவர். அவர் இதற்கெல்லாம் பதில் சொல்ல மாநகராட்சி கூட்டத்தை பயன்படுத்துகிறாரா என்றால் இல்லை. அவையெல்லாம் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென்று சொன்னால், உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் திமுக ஒரு மிகப்பெரிய வெற்றியை பெறும் போது, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நிறைவேற்றக் கூடிய அந்த வாய்ப்பு நமக்கு நிச்சயம் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic