பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி மாலை பஞ்சாப் மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஜெகதீஷ் காக்னேஜா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஜெகதீஷ் காக்னேஜா மீது சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ந்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. குண்டு துளைத்ததால் பல பாகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இன்று காலை சுமார் 9 மணியளவில் சிக்ச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏற்கனவே குடல் மற்றும் பல பாகங்களை குண்டு துளைத்தால் கடந்த சில நாட்களாக அவருக்கு செயற்கை சுவாகம் பொறுத்தப்பட்டிருந்தது.
முன்னதாக, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். கடந்த மாதம் 11ஆம் தேதி 3 பேரை ஜலந்தர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு 5 வாரங்களுக்குப் பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments