Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 22, 2016

தமிழ் மன்னன் கட்டிய பிரம்மாண்ட கோயில் எங்கு இருக்கு தெரியுமா...?




உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா?

ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காடிய "அங்கோர்ட்வா" கோயில். இரண்டாம் சூர்யவர்மன் இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினார். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயல்பட்டது. ஒரு பெருமையான விசயம் என்னவெனில் , "விஷ்ணு" கடவுளுக்காக இந்த கோயிலானது இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே மிகப்பெரியது. இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம். திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள் வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்றுச்சுவரே 3.6 கிலோ மீட்டர் என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இதன் கட்டுப்மாணப்பணிகள் பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கப்பட்டிருக்கிறது. இருபத்தி ஏழு ஆண்டுகள் இந்த இடத்தை ஆண்ட சூர்யவர்மன் இறக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இதன் வேலைகள் நிறைவடைந்துள்ளது.

இதன் பின்னர் ஆறாம் ஜெயவர்மன் கைக்கு மாறியது. பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக புத்த வழிபாட்டுத்தளமாக மாற்றப்பட்டது. இன்று வரை இது புத்த வழிபாட்டுத்தளமாகவே செயல்பட்டு வருகின்றது. பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்படது. அடர்ன்ட காட்டுக்குள் இது கட்டப்பட்டதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதிலமடையத்துவங்கியது.

பின்னர் 1586 ஆம் ஆண்டு அன்டோனியா டா மடலேனா என்ற போர்துகீசிய துறவியின் கண்ணில் பட்டது. இக்கோயில் தொடர்பாக அவர் கூறும்போது "இந்த அழகிய கட்டடத்தை பேனாவால் விவரித்துவிட முடியாது. இது போன்ற கட்டிடம் உலகில் வேறு எங்கும் இல்லை." என தெரிவித்திருக்கிறார். பின்னர் ஹென்ரி மெளஹட் என்ற பிரஞ்சு எழுத்தாளர் தன் புத்தகத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகமெங்கும் பரவத்துவங்கியது. அதன் பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகுதான் இது தமிழர்கள் கட்டியது என்று தெரியவந்தது.

இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட இப்போதைக்கும் இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறியுள்ளார். ஆனால் எந்த ஒரு தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலகட்டத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கம்போடியா நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் தேசிய சின்னமாக பொறிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இத முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை. வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது. இவ்வளவு சிறப்புவாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்துனை தமிழர்களுக்கு தெரியும் என்பது கேள்விக்குரியே?

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic