Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 23, 2016

தமிழகத்துக்கு எதிராக மனு கொடுத்த நிர்மலா சீத்தாராமன்!



தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கர்நாடகத்தைச் சார்ந்த அனைத்து அரசியல் தலைவர்களும் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்று கூறி வருகின்றனர். 

தேசியக் கட்சிகளைப் பொருத்தவரை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப ஒரு முடிவை எடுக்கிறார்கள். தமிழக பாஜக தண்ணீர் வேண்டும் என்கிறது. கர்நாடக பாஜகவோ தண்ணீர் கொடுக்க முடியாது என்கிறது. கர்நாடக காங்கிரஸ் தண்ணீர் கொடுக்க முடியாது என்கிறது. 

தமிழக காங்கிரஸ் கட்சியோ தண்ணீர் வேண்டும் என்கிறது. ஆனால், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கர்நாடக மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்களால் ராஜ்ய சபா எம்.பி. ஆக்கப்பட்ட நிர்மலா சீத்தாராமன் கர்நாடகாவைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஆனந்த்குமாருடன் இணைந்து தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியிடம் மனு கொடுத்துள்ளார்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான நிர்மலா சீத்தாராமனின் சொந்த ஊர் மதுரை. பி.ஏ. பட்டப்படிப்பை திருச்சியில் உள்ள சீத்தாலட்சுமி ராமசாமி கல்லூரியில் முடித்து பி.ஏ. பொருளாதாரத்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முடித்து பிபிசி உலக செய்திச் சேவையின் நிர்வாகத்தில் பணி செய்தவர். 

பிரணவா என்னும் பள்ளியை ஐதராபாத்தில் நிறுவி நடத்திவரும் இவர், பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவர். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் கர்நாடக பாஜக உறுப்பினர்களால் ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீத்தாராமன் சமீபத்தில் “காவிரி விவகாரம் என்பது இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னை. இதில் பிரதமர் மோடியை தலையிடக் கோருவது தவறு” என்று பெங்களூருவில் வைத்து சொல்லியிருந்தார். 

ஆனால் நேற்று கர்நாடக பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான அனந்தகுமார், சதானந்த கவுடா ஆகியோருடன் இணைந்து நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியைச் சந்தித்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என மனு கொடுத்துள்ளார். தமிழகத்தைச் சார்ந்த அதிமுக, திமுக உறுப்பினர்கள் எவரும் காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரையோ அல்லது நீர்வளத்துறை அமைச்சர்களையோ இதுவரை சந்திக்காத நிலையில் நிர்மலா சீத்தாராமனின் இச்சந்திப்பு கவனிப்பை ஈர்த்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic