Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 7, 2016

ஜியோ ஃபோன் வாங்கிடீங்களா...? கொஞ்சம் உஷாராவே இருங்க!


சென்னை: ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ சிம் கார்டுகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஜியோவின் வாடிக்கையாளர்கள் கடை திறப்புக்கு முன்பே வரிசையில் நின்றுக்கொண்டு காத்திருக்கிறார்கள். இது அனைத்திற்கும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்த இலவசம் மற்றும் குறைந்த கட்டணத்தில் அதிக பயன்பாடு ஆகியவையே காரணம்.

இந்த நிலையில், அனைத்து விதமான ஜியோ ஸ்மார்ட்போன்களை  பயன்படுத்துபவர்களுக்கு, அந்த ஃபோனை பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஒருவர், ஜியோ ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதாக எச்சரித்துள்ளார்.

தான் பயன்படுத்தி வந்த லைப் வாட்டர் 1 மொபைல்போன் வெடித்துச் சிதறியதாக பதிவிட்டுள்ள அவர், லைஃப் வாட்டர் 1 மொபைல்போனில் ஃபேஸ்புக்கை பயன்படுத்தியபோது, திடீரென வெடித்து கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

ஜியோ ஃபோனை பொறுத்தவரை 4ஜியில் இயங்குவதால், மொபைல்போன் அதிக சூடாகிறது என்ற குற்றச்சாட்டு ஆங்காங்கே வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளது. இணையதளம் வேகமாக இயங்குகிறது என்பதாலும், இலவச அழைப்புகள் என்பதாலும் மணிக்கணக்கில் ஜியோ போனை பயன்படுத்துவோர் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic