சிவகார்த்திகேயன் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும், ஒரு சக நடிகனாக நானும் நடிகர் சங்கமும் அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ரெமோ'. சிவகார்த்திகேயன் பெண் வேடம் எல்லாம் போட்டு நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்கள் அதிக பட்ஜெட்டில் வெளிவந்துள்ள படமும் இதுதான். இப்படத்திற்கு மாறுபட்ட விமர்சனங்கள் வந்த போதிலும் தொடர் விடுமுறையால் ரெமோ படத்தின் வசூல் சிறப்பாகவே இருந்துள்ளது.
இந்நிலையில் ரெமோ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் மிகவும் உணர்ச்சிகரமாக பேசியதோடு விழா மேடையிலேயே கண்கலங்கினார். "யார்கிட்ட இருந்தோ இந்த ஹிட்டை திருடிட்டு வர்ற் மாதிரியே நினைக்கிறாங்க, அப்படி கிடையவே கிடையாது. ரொம்ப போராடித்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கேன். நாங்க யார்கிட்டையும் எதுவும் கேக்கல, உதவி எதுவும் செய்ய வேணாம். உதவியோ ஆதரவோ கொடுக்கிறதுக்கு மீடியா இருக்காங்க, மக்கள் இருக்காங்க. ஆனா வேலை செய்யறத தயவு செஞ்சி தடுக்காதீங்க. அதை எல்லாருக்கும் நான் வேண்டுகோளா வச்சிக்கிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.
சிவாவின் இந்த பேச்சு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நல பெற வேண்டு காஞ்சிபுரத்தில் நடந்த சிறப்பு பூஜையில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர் கூறியதாவது "சிவாவின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். சக நடிகனாக நான் அவருக்கு துணை நிற்பேன். இது தொடர்பாக நடிகர் சங்கத்திலும் மூன்று புகார்கள் வந்துள்ளது. புகார் மீது நடவடிக்கை போய் கொண்டிருக்கிற்து. விரைவில் அவருக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சினிமாவில் நிறைய துறையில் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கிறது. ஒரு காலத்தில் சிவா போன்று நானும் பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். நடிகர் சங்கத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து பெற்ற தொகை அதன் பின்னர் சங்கத்தில் மேற்கொண்ட நலதிட்ட உதவிகள் எல்லாவற்றுக்கு கணக்கு உள்ளது. யார் வேண்டுமானாலும் ஏன் நீங்க கூட வந்து கணக்குகளை பார்க்கலாம் என தெரிவித்தார்.

No comments:
Write comments