பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் கடந்த ஜனவரி மாதம் 2–ந்தேதி புகுந்த 6 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இந்ததிய பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் அனைவரும் கொல்லபட்டனர்.
பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து வந்த ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. எனவே அந்த இயக்கம் மற்றும் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா அறிவுறுத்தியது.
இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசார், அவரது சகோதரர் அப்துல் ரவுப் அஸ்கர் உள்பட 4 தீவிரவாதிகள் தொடர்பான சில ஆதாரங்களும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன.அத்துடன், பதன்கோட் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் பிரதமர் மோடியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் அமெரிக்கா இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய பங்கு இருப்பதற்கான முக்கிய ஆதாரங்களை அமெரிக்கா இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் வழங்கி உள்ளது. மேலும் பாகிஸ்தானில் ஜெய்ஷ்–இ–முகமது தீவிரவாதிகள் பயன்படுத்தி பேஸ்புக் குழுவின் ஐபி முகவரிகளையும் கொடுத்து உள்ளது.
டைம்ஸ் ஆப் இந்திய தகவலின் படி ஜெய்ஷ்–இ–முகமது இயக்கம் நிதி திரட்டிய அல் ரஹ்மான் டிரஸ்டின் ஐபி முகவரியையும் வழங்கி உள்ளது. இந்த ஐபி முகவரிகள் மற்றும் இணையதளங்கள் அனைத்தும் பாகிஸ்தானில், ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பதன் கோட் தாக்குதலின் போது இணையதளங்களில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது என அமெரிக்க உறுதி செய்து உள்ளது.

No comments:
Write comments