அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அங்குள்ள மக்களே கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த மாதம் 8ஆம் தேதி அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளிவுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில் இருவேட்பாளருக்கிடையே நடைபெறும் விவாதங்கள் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துகொண்டிருக்கின்றனர்.
இதில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது. காரணம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் வெளியிட்டுவருகிறார். இதனால் அவருடைய சொந்த கட்சியிலிருந்தே அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. சமீபத்தில் அவருடைய பழைய வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர் பெண்கள் குறித்து மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.
தற்போது அமெரிக்காவில் அவருக்கு எதிரான பிரச்சாரங்களை மக்களே செய்கின்றனர். அதில் விநோதமாக தெருவோரம் அமர்ந்திருக்கும் ஒரு பிச்சைக்காரர் ஒரு வாசகம் அடங்கிய அட்டையை தன் முன்பு வைத்துக்கொண்டு பிச்சை எடுத்து வருகிறார். அந்த அட்டையில் "ஒரு டாலரையாவது தர்மம் செய்யுங்கள், இல்லையென்றால் வரும் தேர்தலில் டொனால் டிரம்பிற்கு ஓட்டு போட்டுவிடுவேன்" என எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

No comments:
Write comments