தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுடனேயே அனைத்து அரசு அறிவிப்புகளும் வெளியாகின்றன என்றார்.
டெல்லியில் நடைபெற்ற காவிரி தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். டெல்லியில் வாசிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் உரைக்கு அவரது ஒப்புதல் பெறப்பட்டதுடன் என்ன மாதிரியான கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா கோமா நிலையில் ஒன்றும் இல்லை. நல்ல சுயநினைவுடனேயே உள்ளார். அனைத்து முடிவுகளுக்கும் அவரது ஒப்புதல் பெறப்படுகிறது என பொன்னையன் அந்த பேட்டியில் கூறினார்.

No comments:
Write comments