Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 11, 2016

அதிமுகவை கைப்பற்ற துடிக்கும் சசிகலா..?

sasikala plans to control AIADMK

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், தலைமைச்செயலகம் காலிச்செயலகமாக மாறிவிட்டது.

முதல்வர் மருத்துவமனையில் இருந்து, நாட்டை வழிநடத்துவதற்காக அவருக்கு கீழே இருக்கும் அமைச்சர்கள் தான் செயல்பட வேண்டும். ஆனால் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அப்பல்லோ முதல் அம்மன் கோயில் வரை நடக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

தற்காலிக முதல்வரை கூட நிர்ணயிக்க முடியாத நிலையில் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது, இதற்கெல்லாம் அதிமுக கட்சிக்குள் நடக்கும் உட்பூசல்களே காரணம்.

என்னதான் அதிமுக கட்சி அமைச்சர்கள் அதிகாரத்தில் இருந்துகொண்டு ஆடினாலும், அவர்களை ஆட்டுவிப்பவர் சசிகலா நடராஜன் தான் என்ற பேச்சு அடிபடுகிறது.

ஆரம்ப நாள் தொட்டு இன்று வரை அம்மாவின் பின்னால் இருக்கும் இவர், வெளிப்படையாக அரசியலில் தலைகாட்டாவிட்டாலும், பெரிய அரசியல் புள்ளிகளை பற்றி தகவல்கள் இவரின் காதுகளை எட்டிய பின்னரே, அம்மாவின் விசாரணைக்கு செல்லும்.

தற்போது அம்மா மருத்துவமனையில் இருப்பதால், இவரின் அரசியல் ஆசை மேலோங்கியதோடு மட்டுமல்லாமல், அதிகார பலமும் கொடிகட்டி பறக்க ஆரம்பித்துவிட்டது.

கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் சசிகலா கோஷ்டியினர், அதிமுக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்வதாக சசிகலா புஷ்பா எம்பி பரபரப்பு பேட்டி அளித்தார்.

மேலும், கட்சிக்குள் பல்வேறு உட்பூசல்கள் நடக்கிறது என்றும் போயஸ் கார்டனில் வேலை பார்க்கும் இவர்கள் சொல்வதை அதிகாரிகளாகிய எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அதிமுக கட்சியின் அமைச்சர்கள் துணிந்து முன்வரவேண்டும், கட்சியை வழிநடத்த வேண்டும் என அதிரடி பேட்டியளித்தார்.

கட்சியின் அதிகாரத்தை தனக்குள் கொண்டுவர, சகிகலா வகுத்துள்ள வியூகம் தான் தஞ்சாவூர் தொகுதி. கடந்த சட்டமன்ற தேர்தலில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளில், தஞ்சாவூர் தொகுதியில் நின்று எம்எல்ஏ பதவியை பிடித்து படிப்படியாக அரசியலுக்குள் வந்தால் தான், ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற முடிவில் சசிகலா இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்கள் யாரும் இல்லை, அப்படி ஒரு அமைச்சரை பொறுப்பாக நியமித்தாலும், அவருக்கு ஆதரவாக அதிமுக கட்சியினர் இருப்பார்களா? என்பது சந்தேகமான ஒன்றுதான்.

1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் இறந்தபோது கூட கட்சி இரண்டாக உடைந்தது. எம்ஜிஆரின் மனைவி ஜானகி, ஜெயலலிதா தலைமையில் கட்சி இரண்டானது.

அப்போது, அதிகமான ஆதரவு ஜெயலலிதாவுக்கு வந்ததால் கட்சியை வழிநடத்தி ஆட்சி பீடத்தை பிடித்தார். ஆனால், தற்போது ஜெயலலிதாவுக்கு பின்னர் அக்கட்சியை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி? தமிழகம் முழுவதும் ஒலிக்கிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic