தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் புதுவையில் நெல்லித்தோப்பு தொகுதியிலும் வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக-வுக்கும் திமுக-வுக்கும் புதுவையில் காங்கிரஸுக்கும் அதிமுக-வுக்கும் நேரடி போட்டி உருவாகியுள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முதலமைச்சர் நாராயணசாமியும், அதிமுக வேட்பாளராக ஓம்சக்தி சேகரும் போட்டியிடுகிறார்கள், நவம்பர் 14ஆம் தேதி நமது மின்னம்பலம்.காம் இணைய இதழில் மாலை 7.00 மணி செய்தியில், ‘வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை முடித்த அதிமுக-திமுக!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு தலா ரூ.2000 என்று நவம்பர் 14ஆம் தேதி காலையில் அதிமுக-வினர் விநியோகம் செய்தனர்; திமுக-வினர் வாக்காளர்களுக்கு தலா ரூ.500 என்று நவம்பர் 13ஆம் தேதி காலையில் வழங்கினார்கள் என்றும், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் 70 சதவிகிதம் வாக்காளர்களுக்கு தலா ரூ.3000 வழங்கியதையும் தெளிவாக வெளியிட்டிருந்தோம். வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யபட்ட செய்தியைப் பார்த்த பாமக மாநில சமூக நீதி பேரவை செயலாளர் வழக்கறிஞர் பாலு, “திராவிடக் கட்சியான திமுக-வினர் அதிமுக-வினர் தொகுதிக்கு ரூ.60 கோடி கறுப்புப் பணத்தை விநியோகம் செய்துள்ளார்கள். தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி கறுப்புப் பணத்தை பயன்படுத்தியுள்ளார்கள், அதனால்தான் உயர்நீதிமன்றத்தில் டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு தேர்தல் நடத்துங்கள் என்று மனு செய்தேன். காரணம், மத்திய அரசு செல்லாத பணமான ரூ.500, 1000 நோட்டுகளை 2016 டிசம்பர் 31க்குள் மாற்றிக்கொள்ள நேரம் கொடுத்துள்ளது, 2017இல் தேர்தல் நடத்தியிருந்தால் வாக்காளர்களுக்கு கறுப்புப் பணத்தை கொடுத்திருக்க முடியாது. அதனால்தான் நீதிமன்றத்தில் வாதாடினேன், போராடினேன்” என்றார்.
No comments:
Write comments