"வாழ்த்துகள் மோடிஜி, ஆனால் அந்த 15 லட்சம் என்னாச்சு..??" என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன் டுவிட்டரில் கிண்டல் அடித்துள்ளார். மோடி ஆட்சிக்கு வரும் முன்னர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிநாட்டிலுள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவேன், இந்தியர் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என வாக்குறுதி அளித்திருந்தார்.
அது தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மோடியின் ஆதரவாளர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடினர். இதன் விளைவு பாஜக வெற்றி பெற்றது. ரகுராம் ராஜன் சிறந்த கவர்னராக இருந்தும் அவரை நீக்க வேண்டும் என சுப்ரமணியம் சாமி கொடி பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இதை மோடி மறைமுகமாக ஆதரித்தார். இதன் விளைவு ரகுராம் ராஜன் பதவி விலக நேர்ந்தது. புதிய கவர்னர் தேர்வு செய்யப்பட்டார். தற்போது மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை வரவேற்று வாழ்த்தியுள்ள ரகுராம் ராஜன், 15 லட்சம் தருவதாக அளித்த வாக்குறுதி என்ன ஆச்சு அதையும் நிறைவேற்றினால் ஏற்றுகொள்வோம் என்ற பொருளில் கிண்டல் அடித்துள்ளார்.
அது என்ன ஆச்சு அப்படியே இருக்குமா என்ற ரீதியில் ஒரு அரசியல் விவாதத்தை முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனர் துவக்கி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கோடி கருப்பு பணத்தை கொண்டு வருவேன் என்ற மோடியின் வாக்குறுதி தோல்வியடைந்துள்ளது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments