கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், படத்துக்கு தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது.
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. சிவா தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் கடவுள் இருக்கான் குமாரு. இந்த படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார்.
லிங்கா படத்தை திருச்சி, தஞ்சை ஆகிய பகுதிகளுக்கு வெளியிட்டவர் சிங்காரவேலன். இவர் திருச்சி, தஞ்சை பகுதிகளுக்கு வெளியிட்டு இருந்தாலும், திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும்போது திரையரங்குகளும் சேலத்தை சேர்ந்த 7G பிலிம்ஸ் சிவா மட்டுமே ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று வேந்தர் மூவிஸ் சார்பில் கண்டிஷன் போடப்பட்டது.
6.5 கோடி ரூபாய் திரையரங்குகள் மூலம் வசூலித்து தருவதாக ஒப்பந்தம் போட்ட சேலம் 7G சிவா திரையரங்குகளில் இருந்து 6.5 கோடி வசூலித்து விட்டு 5 கோடி 88 லட்சம் மட்டுமே செலுத்தினர். மீதி 62 லட்சத்தை செலுத்தவில்லை. சேலம் 7G சிவா தான் கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிட இருக்கிறார். சேலம் 7G சிவாவிடமிருந்து தனக்கு பணம் வர வேண்டும் என்றும் இந்த படம் வெளியானால் தனக்கு பணம் கிடைக்காமல் போய்விடும் என்று சிங்காரவேலன் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், சேலம் சிவா ரூ 35 லட்சத்தை வைப்புத் தொகையாகச் செலுத்திவிட்டு வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம் என்று தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கு படத்தின் தயாரிப்பாளர் டி சிவாவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும், கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிடத் தடை ஏதுமில்லை என்றும் உத்தரவிட்டார்
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments