நேற்றிரவு முதல் இந்தியாவில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்தநிலையில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டரில்,
மற்றொரு முறை, நாட்டில் உள்ள ஏழைகளை பற்றி கொஞ்சமும் கவலைப்படாததை மோடி வெளிக்காண்பித்துள்ளார். ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுள்ளதால், விவசாயிகள், ஏழை மக்கள் சிறு கடை உரிமையாளர்கள், குடும்ப தலைவிகள் குழப்பத்தில் உள்ளனர்.
உண்மையில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்கள், வெளிநாட்டில் பணத்தை பதுக்கி வைத்து விட்டு நிம்மதியாக உள்ளனர். அல்லது தங்க கட்டிகளாகவோரியல் எஸ்டேட்டிலோ தங்களது பணத்தை முதலீடு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், நரேந்திர மோடியிடம் தான் ஒரு கேள்வி கேட்க விரும்புவதாக கூறிய அவர், 1,000 ரூபாய்க்கு பதில் 2,000 ரூபாயை கொண்டு வருவதன் மூலம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புபணத்தை எப்படி ஒழிக்கப்போகின்றீர்கள்?என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு ஏழைகளைப் பற்றி கவலையில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments