அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சீட்டல் பகுதியில் பேரணி நடத்தப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர். அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். முதல்கட்ட தகவலின்படி 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணிக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கு எதிராக இது போன்ற போராட்டங்கள் நடத்தப்படுவது வேடிக்கையாகவே இருக்கிறது. அதிலும் வல்லரசு நாடான அமெரிக்காவில் இது போன்ற போராட்டங்கள் நடத்தப்படுவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக ஆக்கக்கூடியது என பலரும் விமர்சித்துள்ளனர்.
No comments:
Write comments