Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 10, 2016

செருப்பால் அடிப்பேன் ! - சீறிய நடிகை கீதா

தெலுங்கு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை செருப்பால் அடிப்பேன் என்று ஆவேசமாக நடிகை கீதா கூறியிருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகை கீதா தெலுங்கு சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த மாதம் 31ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் 20 வயது பெண்ணும், 23 வயது திருநங்கை ஒருவரும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து, இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக 20 வயது பெண் தெரிவித்தார். ஆணாக இருக்கும் திருநங்கையைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அந்தப்பெண் கூறினார். திருநங்கையும், தான் ஆண்தான் என்றும், பெண் அல்ல என்றும் தெரிவித்தார்.

இதனால், கடுப்படைந்த கீதா, ''ஆரம்பத்தில் இருந்து நீ இப்படித்தான் இருந்தாயா? செருப்பால் அடிப்பேன்'' என்று ஆவேசமாக பேசினார். இதைப் பார்த்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பெண்ணின் பெற்றோரிடம் உங்களது பெண்ணுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்து வேறு ஊருக்கு அனுப்பி விடுங்கள் என்று ஆலோசனையும் வழங்கினார். இவரது இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று தெலுங்கு சேனலில் நிகழ்ச்சி வழங்கி வரும் நடிகை ரோஜாவும், சமீபத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞரை அடிக்க கை ஓங்கி இருந்தது அதிர்ச்சியைஏற்படுத்தி இருந்தது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic