Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 10, 2016

ஐடியா கொடுத்த 'ஐடியா மணி' இவர் தான்...!

anil bokhil behind currency ban

இந்தியாவில் 1000, 500 ரூபாய் நோட்டுகளை தடை செய்வதாக பிரதமர் அறிவித்ததன் பின்னனியில் இருக்கும் ஒரு நபரை பற்றிய விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

1000, 500 ரூபாய் நோட்டுகள் இனி இந்திய நாட்டில் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இரு தினங்கள் ஆகிவிட்ட நிலையில், அவரின் அறிவிப்புக்கு முதலில் ஐடியா கொடுத்த நபர் புனே நகரை சேர்ந்த நிதி ஆலோசகர் அனில் போகில் என தற்போது தெரியவந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் பிரதமரை சந்திக்க சிறப்பு அனுமதி பெற்ற அனில் இது தொடர்பாக பிரதமருக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

அதில், இறக்குமதி வரியை தள்ளுபடி செய்யுமாறும், 56 வகை வரி விதிப்புகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் 1000, 500 நோட்டுகளுடன் 100 ரூபாய் நோட்டுகளையும் தடை செய்ய அவர் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார் மற்றும் அனைத்து வகை பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் வழியாக, செக், டிடி மற்றும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற வேண்டும் என்றும் பிரதமரிடம் அனில் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் 78 சதவீத மக்கள் தினசரி சராசரியாக 20 ரூபாய் செலவிடுவதாக புள்ளிவிவரம் ஒன்று கூறுவதால் அவர்களுக்கு 1000, 500 நோட்டுகளால் அதிக பயனில்லை என்பதையும் கருத்தில் கொண்டு பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic