Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 2, 2016

டைம்ஸ் நவ் நிறுவனத்திலிருந்து வெளியேறிய அர்ணாப் கோசுவாமி!

arnab resigned from times nowர்ணாப் கோசுவாமி தான் பணியாற்றி வந்த 'டைம்ஸ் நவ்' செய்தி தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி நிறுவனமான 'டைம்ஸ் நவ்' சேனலில் ஒவ்வொரு நாளும் இரவும் 9 மணிக்கு ' நியுஸ் ஹவர்' என்னும் விவாத நிகழ்சி நடத்தி வந்தவர் அர்ணாப் கோசுவாமி. இ ந் நிறுவனத்தில் தலைமை செய்தி ஆசிரியராக பணி புரிந்து வந்த இவர் தான் நடத்தும் விவாத நிகழ்சிகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசக்கூடியவர். விவாதத்தில் பங்கெடுக்க வந்த எந்த நபரும் தான் கூற  விரும்பிய முழு கருத்தையும் அர்ணாப் சொல்லவிட்டதே இல்லை.

அவர் நடத்தும் ஒவ்வொரு விவாத நிகழ்சிகளிலும் தனது கருத்தை மட்டுமே திணித்து மற்றவர்களை பேசவிடாமல் தடுத்துக்கொண்டே இருப்பவர். சமீபத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவின் இராணுவ தலைமையகத்தின் மீது நடத்திய தாக்குதலையும் அதற்கு பதிலடி கொடுத்ததாக கூறப்படும் சர்ஜிகல் ஆபரேஷன் தொடர்பாக மிகவும் காட்டமான முறையில் தனது நிகழ்சிகளில் விவாதங்களை நடத்தினார். இதனால் அவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாகவும், அதனால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் அரசு செலவில் பாதுகாப்பிற்காக ஈடுபடுவார்கள் என மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

கடந்த சில நாட்களாக அவர் நடத்தி வரும் நியுஸ் ஹவர் நிகழ்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. இதை பார்கும்போது அவர் அந்நிறுவனத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது அரசியல் பிரமுகர் ராஜீவ் சந்திரசேகர் என்பவருடன் இணைந்து தனியாக செய்தி தொலைக்காட்சி நிறுவனம் துவங்க இருப்பதாகவும், அதே சமயம் ஃபாக்ஸ் நியுஸ் சேனலில் இணையப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தவன்னம் இருக்கின்றது.

அர்ணாப் கோசுவாமி மீடியா துறையில் கடந்த 1995 ஆம் ஆண்டு நுழைந்தார். துவக்கத்தில் 'தி டெலிகிராப்' என்னும் செய்தித்தாள் நிறுவனத்தில் பணி புரிந்தார். பின்னர் என்.டி.டி.வி தொலைக்காட்சி நிறுவனத்திலும், பின்னர் 2006ஆம் ஆண்டு முதல் டைம்ஸ் நவ் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic