Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 2, 2016

நமது எதிரிகள் இந்துவா? முஸ்லிமா? - பா.ஜ.க அமைச்சரின் சர்ச்சை பேச்சு

biswa sharma bjp ministerமது எதிரிகள் யார் என்பதை நாம் தீர்மாணிக்க வேண்டும் என அஸ்ஸாம் மாநில பா.ஜ.க அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமை சட்ட மசோதாவில் மாற்றம் செய்வதற்கான ஆதரவு பிரச்சாரங்களை பா.ஜ.க அரசு திரட்டி வருகிறது. வங்கதேசத்திலிருந்து இதுவரை 55 லட்சம் முஸ்லிம்களும், 1 முதல் 1.5 லட்சம் வரை இந்துக்கள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து வந்துள்ளதாகவும் பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அரசு தரப்பிலிருந்து ஆதரப்பூர்வமாக இதுவரை எத்துனை பேர் அகதிகளாக அஸ்ஸாமிற்குள் நுழைந்துள்ளனர் என்பது பற்றிய தெளிவான புள்ளி விபரங்கள் சொல்லப்படவில்லை.

எனவே குடியுரிமை சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென பா.ஜ.க முயற்சித்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய பா.ஜ.க அமைச்சர் பிஸ்வார் சர்மா கூறியதாவது,

" நம்முடைய எதிரிகள் யார் என்பதை தீர்மானிக்க வேண்டும். 1.5 லட்சம் இருக்கக்கூடிய இந்துக்களா அல்லது 55 லட்சம் இருக்கக்கூடிய முஸ்லிம்களா? அஸ்ஸாம் மாநில மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாமில் உள்ள 11 மாவட்டங்கள் நமது கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் 2021ற்குள் மேலும் 6 மாவட்டங்கள் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடும். காரணம் இந்த மா நிலங்களிலெல்லாம் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிவிட்டது. அங்கு இந்துக்கள் சிறுபான்மையினராகவே வாழ்கின்றனர்.

பா.ஜ.க கொண்டு வர நினைக்கும் சட்ட திருத்தத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து எந்தவொரு ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் குடியேர வரும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர்கள், ஜெயின் சமூகத்தினர் மற்றும் பார்சி சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்க அனுமதி அளிக்கிறது.

அப்படியானால் அகதிகளாக குடியேர வருபவர்களிடமும் இந்துக்கள், முஸ்லிம்கள் என வேற்றுமை பார்பீர்களா என கேட்டதற்கும், "ஆமாம்! நிச்சயமாக. இந்துக்களை மட்டுமே குடியேருவதற்கு அனுமதி வழங்குவோம். இந்த நாடு சுதந்திரத்திற்கு பின்னால் மதத்தின் அடிப்படையில் பிளவு பட்டது. அப்படியானால் இதுபோன்ற முடிவுகள்தான் எடுக்கப்பட வேண்டும். இது எங்கள் பா.ஜ.கவின் நிலைபாடும் கூட" என தெரிவித்தார்.

அஸ்ஸாமில் வாழக்கூடிய இந்துக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மதத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் நடைபெறும் இந்த தாக்குதலுக்கு முடிவுகட்டியே ஆகவேண்டும். எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டிய நேரம் இது. டிபுருகர் மற்றும் தினுஷ்கியா போன்ற மாவட்டங்களுக்கு சென்று பார்த்தால் அங்கு அமைதியான சூழல் நிலவுகிறது, காரணம் அங்கு இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். துபுரி, பர்பேட்டா போன்ற மாவட்டங்களுக்கு சென்று பாருங்கள், அங்கு அமைதியான சூழ்நிலையா நிலவுகிறது? அங்கு இருக்ககூடிய இந்துக்கள் அச்சத்துடனே வாழ்கின்றனர். காரணம் அங்கு பெரும்பான்மையாக வசிப்பவர்கள் முஸ்லிம்கள்.

பா.ஜ.கவை பொருத்தவரை வங்காள மொழி பேசக்கூடிய இந்து அகதிகளை பாதுகாக்க வேண்டும். அவர்களை வங்காள மொழி பேசக்கூடிய முஸ்லிம்களிடமிருந்து பிரிக்க வேண்டும். அவர்களை இந்திய குடியுரிமை பெற்றவர்களாக மாற்றி அஸ்ஸாமில் குடியமர்த்த வேண்டும். இது தான் பா.ஜ.கவின் நிலைபாடு. இதனை நாங்கள் புதிதாக கூறவில்லை. தேர்தலுக்கு முன்னிருந்தே இதே நிலைபாட்டில்தான் இருந்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதன் போது பா.ஜ.கவின் மூத்த தலைவர் ராம் மாதவ் உடனிருந்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic