Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 8, 2016

NDTV மீதான தடை நிறுத்திவைப்பு

NDTV ban cancelled

என்.டி.டி.வி. இந்தியா சானலுக்கு விதிக்கப்பட்ட ஒருநாள் தடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பதான் கோட் விமான தளத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை என்.டி.டி.வி இந்தியா தொலைகாட்சி நேரடியாக ஒளிப்பரப்பியதற்காக மத்திய அரசு ஒருநாள் தடை விதித்தது.

முன்னதாக, மும்பை தாக்குதலின் போது இந்திய தொலைகாட்சிகள் சம்பவ இடத்திலிருந்து நேரடி ஒளிப்பரப்பு செய்தன. இதை, பாகிஸ்தானிலிருந்து பார்த்த பயங்கரவாதிகள் சேட்டிலைட் போன் மூலம் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தகவல் அளித்தனர். செய்தி தொலைகாட்சிகளின் செயல்கள், இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக பயங்கரவாதிகளுக்கு தெரியும் வகையில் அமைந்தது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலின் போது என்.டி.டி.வி இந்தியா தொலைகாட்சி நேரடி ஒளிப்பரப்பு செய்தது.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் தொலைகாட்சி ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. பதான் கோட் தாக்குதலின் போது ராணுவ நடவடிக்கைகளை நேரடியாக ஒளிப்பரப்பியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், மத்திய அரசு என்.டி.டி.வி.க்கு நவ.,9 ம் தேதி ஒளிப்பரப்பிற்கு ஒரு நாள் தடை விதித்தது.

இதையடுத்து, அந்நிறுவனம் தடையை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஊடக சுதந்திரத்தை பறிக்கும் வகையில் செயல்படுவதாக சில ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், என்.டி.டி.வி. சேர்மன் பிரனாய் ராய் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து பேசினார். தடை உத்தரவை மறுபரசீலணை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, என்.டி.டி.வி., இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட ஒருநாள் தடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic