Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 4, 2016

ஒருநாள் தடை: என்.டி.டி.வி. பதில்!


பதன்கோட் விமானத்தளத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன்கள் நடந்த வேளையில் என்.டி.டி.வி. ஒளிபரப்பிய செய்தித்தொகுப்பில் முக்கியத் தகவல்களை வெளியிட்டதாக, என்.டி.டி.வி. ஹிந்தி சேனலுக்கு 24 மணி நேரம் ஒளிபரப்புத் தடை விதித்திருக்கிறது, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்.
9 நவம்பர் 00:01 மணி முதல் 10 நவம்பர் 00:01 மணி வரை இந்தியா முழுக்க எந்த தளத்தின் வழியாகவும் என்.டி.டி.வி-யை ஒளிபரப்போ, மறு-ஒளிபரப்போ செய்வதற்கு தடைவிதித்திருக்கிறது, அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஆணை. இவ்வகை ஆணை வெளியிடப்படுவது இதுவே முதன்முறை.
இதற்கு பதிலளிக்கும் விதமாக என்.டி.டி.வி. வெளியிட்டிருக்கும் அறிக்கை கீழ்வருமாறு, “தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஆணை பெறப்பட்டிருக்கிறது. இவ்வகையில் என்.டி.டி.வி. மட்டும் தனியே தடை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அனைத்து சேனல்கள், செய்தித்தாள்கள் இதைப் போன்றே செய்தி ஒளிபரப்பினார்கள். சொல்லப்போனால், என்.டி.டி.வியின் கவரேஜ் சீராகவே இருந்தது. அச்சு ஊடகத்துக்கு விலங்கிடப்பட்ட எமர்ஜென்சியின் இருண்ட நாட்கள் முடிந்த பிறகும், இம்முறையில் என்.டி.டி.வி-க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது அசாதாரணமானது. இக்காரியத்தில் இருக்கும் அனைத்து தேர்வுகளையும் என்.டி.டி.வி. ஆய்வு செய்யும்/”
நவம்பர் 2 வெளியிடப்பட்டிருக்கும் கமிட்டியின் ஆணையில், ஜனவரி 4, 2016 அன்று 12:25 மற்றும் 12:31 மணிகளுக்கு ஒளிபரப்பப்பட்ட செய்திகளுக்காகவே தடைவிதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்சொல்லப்படும் ஒளிபரப்பில், தளத்தில் இருந்த நிருபர் ஸ்டூடியோவில் இருந்த தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் குறித்து முக்கியமான தகவல்களை தெரிவித்திருக்கிறார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic