டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட இராணுவ வீரரின் சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற ராகுல் காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி ஜவகர் பவன் பகுதியில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ராம்கிஷன் கிரேவால் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் இது இராணுவ வீரரின் நலனுக்காகவே இவ்வாறு செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதன் காரணமாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக உடல் வைக்கப்பட்டு இருந்த ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு நேற்று மதியம் சென்றார். அவரை போலீஸார் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.
அதையும் மீறி ராகுல் காந்தி பலமுறை மருத்துவமனைக்குள் நுழைய முயற்சி செய்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்து கொண்டு சென்றனர்.
பின்னர் அவர் சில மணி நேரங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். அதேபோல் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைதாகி விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் இராணுவ வீரரின் தற்கொலை சம்பவத்தை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பேரணியில் ஈடுபட முயன்ற ராகுல்காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி மீண்டும் கைது செய்தனர். இரண்டு நாட்களில் மட்டும் ராகுல் காந்தி மூன்று முறை கைது செய்யப்பட்டுள்ளார்.
துக்ளக் சாலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ராகுல்காந்தி அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

No comments:
Write comments