டெல்லி அதிகாரங்களை மத்திய அரசு கட்டுப்படுத்தி கெஜ்ரிவாலை பாடாய் படுத்தி வந்தாலும் தொடர்ந்து மோடிக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் அரவிந்த் கெஜ்ரிவால், பணம் தொடர்பாக மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். நாடெங்கும் மக்களுக்கு எழுந்துள்ள சூழல் தொடர்பாக விவாதிக்க டெல்லி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை இன்று கூட்டவிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், “கறுப்புப் பணத்தை ஒழிக்க கொடுக்கப்பட்டுள்ள கசப்பு மருந்து இது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால், அவர் ஏழைகளுக்கு விஷத்தைத்தான் கொடுத்துள்ளார். ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு என்னையும் மிகவும் பாதித்து இருக்கிறது” என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறினார். அப்போது ஒரு நிருபர், ‘உங்களிடம் தற்போது எவ்வளவு ரூபாய் உள்ளது?’ என்று கேட்டார். அதற்கு கெஜ்ரிவால், ‘‘என்னிடம் ரூபாய் 250 தான் உள்ளது. வேறு சில்லறை நோட்டுகள் கிடைக்கவில்லை’’ என்றார். அதோடு தனது பையில் இருந்து ரூபாய் 250ஐ எடுத்து நிருபர்களிடம் காட்டினார்.
No comments:
Write comments