Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 15, 2016

15 லட்சம் எப்போ கிடைக்கும்:லல்லு !


கறுப்புப் பணத்தின்மீது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பிரதமர் மோடி, தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் இனி, நாட்டு மக்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை செலுத்துவாரா? என, லல்லுபிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணத்தை கண்டுபிடித்து மீட்டு வருவேன். அந்தப் பணத்தை நாட்டு மக்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வீதம் செலுத்துவோம் என்று, கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி தெரிவித்தார்.
தற்போது கறுப்புப் பணத்தை ஒழிக்கும் அதிரடி நடவடிக்கையாக புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும் அதற்குப்பதிலாக புதிய 2000, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 10ஆம் தேதியிலிருந்து வங்கிகள் முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மாற்றிவருகிறார்கள். இதற்காக, அதிகாலையில் இருந்தே காத்துக்கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடந்த 6 நாட்களாக கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.
மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையைக் கண்டித்து பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் ரெயில்வே துறை அமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லல்லுபிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் வரிசையாக கருத்துகளை பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது: கறுப்புப் பணத்துக்கு நானும் எதிரானவன்தான் என்றாலும், அரசின் இந்த நடவடிக்கையில் தொலைநோக்குச் சிந்தனை இல்லை என்று தெரிகிறது. மக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமம் பற்றியும் அரசு சிந்தித்திருக்க வேண்டும். இந்த அறிவிப்பால் வங்கி வரிசையில் காத்து நிற்கும் மக்களின் எத்தனை மணிநேர உழைக்கும் நேரமும் உற்பத்தியும் வீணாகியுள்ளது?
இன்னும் 50 நாட்களுக்கு பொறுமை காக்கும்படி மக்களை கேட்டுக்கொண்டுள்ள நீங்கள் (பிரதமர்) உங்களது முந்தைய வாக்குறுதியின்படி, இந்த 50 நாட்களுக்குப் பிறகு மக்களின் வங்கிக் கணக்கில் தலா 15 லட்சம் ரூபாயை சேர்த்துவிடுவீர்களா? என்பதை தெரிவிக்க வேண்டும். உங்களது இந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்குப் பிறகு மக்களுக்கு 15 லட்சம் ரூபாய் சென்று சேரவில்லை என்றால் இது, மக்கள்மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டராகவே கருதப்படும்.
அரசுக்குச் சொந்தமான வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இவர்களை பாதுகாக்கத்தானா இந்த நாடகம்? என்பதுபற்றி மோடியின் அரசு விளக்கமளிக்க வேண்டும். அந்தப் பண முதலைகளின் பட்டியலை பிரதமர் வெளியிட வேண்டும். கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு, அதிக மதிப்புக்கொண்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது ஏன்? என்று, தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic