யோகாவை கட்டாய பாடமாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை பரிசீலித்தது. அப்போது நீதிபதிகள், "யோகாவை கட்டாய பாடமாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஏற்கெனவே சில மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்திலும் இக்கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட சில மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அந்த உத்தரவை எதிர்த்து சிலர் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அவை நிலுவையில் உள்ளன. எனவே, மனுதாரர் விரும்பினால் அந்த மனுக்களுடன் இந்த கோரிக்கையை சேர்த்து பரிசீலிக்க வலியுறுத்தும் இடைக்கால மனுவை தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்துகிறோம். எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்று குறிப்பிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் யோகா கல்வி தொடர்பாக அஸ்வினி குமார் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை யோகா பாடத்தை கட்டாயமாக்க மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில், மத்திய பள்ளிக் கல்வி வாரியம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும்; தேசிய யோகா கொள்கையை மத்திய அரசு நெறிமுறைப்படுத்த வேண்டும்; ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமையை சுகாதார தினமாக கடைப்பிடிக்க மத்திய பெண்கள், குழந்தைள் நலத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

No comments:
Write comments