Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 8, 2016

குஷ்புவுடன் மோத துடிக்கும் வீரலட்சுமி!‍

veeralakshmi and kushboo
நடிகை குஷ்பு எம்முடன் போட்டிக்கு தயாரா என தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் நிறுவன தலைவர் வீரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, " யார் கருத்து சுதந்திரத்துக்காகவும், பெண்ணியவாதத்திற்காகவும், போராடும் போராளி? இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் நடிகை குஷ்பு பற்றிய தகவலை படித்தேன்.அதிர்ந்து போனேன்!

இரத்தம் கொதித்தது. எனவே இப்போது கவர்ச்சி நடிகை குஷ்புவுக்கு சவால் விடுக்கிறேன். எமது சவாலுக்கு நடிகை குஷ்பு தயாரா? சவால்: குறுகிய நேரத்திற்குள் பெண்ணியவாதம் கருத்து சுதந்திரம் இவற்றால் தமிழின பெண்கள் சந்தித்த துயரம் என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வார்த்தையின் பொருள் பிழையின்றி எழுத்து பிழையின்றி என்னுடன் போட்டி தேர்வு எழுத நடிகை குஷ்பு தயாரா?

அப்படி போட்டியிட தயார் இல்லை என்றால் பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பேசியதற்காக தமிழக மக்களிடம் நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை எனில் பொது சிவில் சட்டத்தை ஆதரித்ததற்காக நடிகை குஷ்பு வீட்டை தமிழர்முன்னேற்றப்படை கட்சி முற்றுகையிடும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic