மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சிமி இயக்க பயங்கரவாதிகள் எண்கவுன்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மூன்றாவது வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபால் மத்திய சிறையிலிருந்து காவல் அதிகாரியை கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் சிமி இயக்க பயங்கரவாதிகளை சிறப்பு காவல்துறை படையினர் 8 மணி நேரத்திற்குள் அவர்களை சுற்றி வளைத்து எண்கவுண்டர் மூலம் சுட்டு கொலை செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. சிறைச்சாலையிலிருந்து தப்பித்த 8 பயங்கரவாதிகளும் எப்படி ஒரே இடத்தில் வைத்து சுட்டு கொலை செய்யப்பட்டனர். என காங்கிரஸ் மற்றும் இன்ன பிற எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மூன்றாவது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் எண்கவுன்டரில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் சுடாதீர்கள்! என கத்துகிறார், மற்றொருவர் விடாதீர்கள்! அவர்களை சுட்டு கொல்லுங்கள் என கத்துகிறார். இச்சம்பவங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டதை அறிந்த மற்றொரு காவல்துறை அதிகாரி வீடியோவை ஆஃப் செய்யுமாறு கூறுகிறார்.
இது போலி எண்கவுன்டராக இருக்கலாம் என பலரும் சந்தேகம் கொள்கின்றனர். ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்த பா.ஜ.க அரசு மறுத்துவிட்டது. இருந்த போதில்லும் இவ்வழக்கு தொடர்பாக சி.ஐ.டி போலிஸார் விசாரணை மேற்கொள்வார்கள் என மத்திய பிரதேச அரசு காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். பிரதே பரிசோதனை செய்யவிருக்கும் மருத்துவர்களும் துப்பாக்கிச்சூடு பல முனைகளிலிருந்தும் நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர். எனினும் முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

No comments:
Write comments