Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 6, 2016

மணக்கோலத்தில் குரூப் 4 தேர்வு எழுதிய பெண்!

ரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு, தமிழகம் முழுவதும் இன்று 301 மையங்களில் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அ‌ளவிற்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர்.

சென்னையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இத்தேர்வை கண்காணிக்க 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைமை கண்காணிப்பாளர்களும், 566 பறக்கும் படையினரும் அமைக்கப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில், 67 ஆயிரத்து 156 பேர் பங்கேற்றனர். தேர்வை கண்காணிக்க 41 நடமாடும் குழுக்களும், 24 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டன. மேலும், வீடியோ கேமராக்கள் மூலமும் தேர்வு கண்காணிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 141 மையங்களில் 55 ஆயிரத்து 957 பேர் தேர்வு எழுதினர். கண்காணிப்புப் பணியில் 190 வருவாய் அலுவலர்களும், 20 பறக்கும் படையினரும் ஈடுபட்டனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் தேர்வு நடைபெறும் மையம் ஒன்றை ஆய்வு செய்த டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி, செய்தியாளர்களிடம் கூறுகையில்,  85 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வரும் 9-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பினை தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இளையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதுபவர்கள் இணையதளத்தில் ‌நாளை அறிவிக்கப்பட உள்ள திருத்தியமைக்கப்பட்ட வரையறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 186 தேர்வு மையங்களில் 72 ஆயிரத்து 943 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 32 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேநிலைப்பள்ளியில் தட்டச்சர் பதவிக்கு மணக்கோலத்தில் பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர் தேர்வு எழுதினார்.

விழுப்புரம் அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்துவரும் சுப்பிரமணியன். இவரது மகள் அகிலாண்டேஸ்வரிக்கும், மேல் தணிக்கலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவரும் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள மெப்ஸில் (MEPZ) பணியாற்றி வரும் தமிழரசன் என்கிற பிரதீப்பிற்கும் இன்று காலை விழுப்புரத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் மணப்பெண் அகிலாண்டேஸ்வரி போட்டித் தேர்வு எழுத புறப்பட்டார். அவருக்குத் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து அனுப்பிவைத்தனர். தேர்வு எழுதிய அகிலாண்டேஸ்வரி பொறியியல் துறையில் பி.இ. (இசிஇ) முடித்தவர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 173 மையங்களில் 52 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுதினர். கவுந்தப்பாடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேர்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 123 மையங்களில் 42 ஆயிரத்து 584 பேர் தேர்வு எழுதினர். 10 பறக்கும் படை உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தேர்வு எழுதுபவர்கள், தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்றுவர வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டன.

இதேபோல், திருச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெற்றது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic