டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி பிரிவு மாணவர் நஜீப் அகமது கடந்த மாதம் 15-ம் தேதி மாயமானார். காணாமல் போனதற்கு முன்தினம் அவரை இரவு விடுதி காப்பாளர் முன்னிலையில் சில மாணவர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வசந்த் கஞ்ச் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மாணவரை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கும்படி டெல்லி போலீசாருக்கும் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த விவகாரத்தில் காணாமல் போன மாணவரை கண்டுபிடிக்க கோரி பல்கலைக் கழக மாணவர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர் மாயமான விவகாரத்தில் மத்திய அரசினை கண்டித்து தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே ஜே.என்.யு பல்கலை கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த போராட்டத்தில் காணாமல் போன மாணவர் நஜீப் அகமதுவின் தாயாரும் கலந்து கொண்டார்.
மாணவர்களின் போராட்டத்தை அடுத்து டெல்லி போலீசார் அப்பகுதியில் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளனர்.
இதனிடையே, ”4 வாரங்களாக மாயமான விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அறிக்கை பெற்று தருவதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உறுதி அளித்துள்ளார்” என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments