Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 3, 2016

தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றுவது கவலை அளிக்கிறது!

மிழக அரசு மாநிலத்தின் நலன் சார்ந்த விசயங்களில் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது கவலை அளிப்பதாக சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக நலன் சம்பந்தப்பட்ட 3 முக்கியமான விஷயங்களில், மாநில அரசு ஏற்கனவே எடுத்திருந்த நிலைபாடு, அண்மையில் நேர் எதிராக மாற்றப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவது, மின் துறை சம்பந்தப் பட்ட உதய் திட்டத்தில் இணைவது, நீட் தேர்வுகளை ஏற்பது ஆகியவற்றில் மத்திய  அரசுடன் உடன்பட மறுத்திருந்த நிலையில் மாற்றம் செய்து, அவற்றுக்குத் தற்போது ஒப்புதல் கொடுக்கப் பட்டுள்ளது. மாநில நலன்களுக்கு இது உகந்ததாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவலை தெரிவிக்கிறது.

உணவு பாதுகாப்பு சட்டம்:

அனைவருக்குமான பொது விநியோக முறை என்பதையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. திமுகவும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய உணவு பாதுகாப்பு சட்டத்தில் கிலோ அரிசி ரூ.3 வீதம் 5 கிலோ, முன்னுரிமை பகுதியினருக்கு (யீசiடிசவைல hடிரளநாடிடன) மட்டும் கிடைக்கும், மற்றவர்களுக்குக் கூடுதல் விலையில் அரிசி விநியோகிக்கப்படும். உணவு பாதுகாப்பு சட்டரீதியாக்கப் படுவதைக் கொள்கை அளவில் ஏற்று அதே சமயத்தில் இதை மேம்படுத்த ஏராளமான திருத்தங்களை மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழிந்தது. அப்போது ஐ.மு.கூ. அரசுக்கு இச்சட்டத்தை விமர்சித்துக் கடிதம் எழுதிய மோடி, அவரது ஆட்சியில் அதே சட்டத்தை எவ்வித மாற்றமும் இன்றி செயல்படுத்துகிறார்.

இலக்கு வைத்த பொதுவிநியோகத்தைக் கடைப்பிடிக்காமல் அனைவருக்கும் அரிசி வழங்கப் படும் முறை நீடிக்கும் தமிழகத்துக்கு இது பயன் தராது. மாறாக பொருளாதார சுமையை ஏற்படுத்தும். எனவே 2013இலிருந்தே தமிழக அரசு இத்திட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது. தற்போது, தமிழக அரசின் தலைமை செயலாளர் இதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக ஊடக செய்திகள்  கூறுகின்றன. தமிழகத்தில் இன்றுள்ள நிலை நீடிக்க வேண்டும் என்றால் அதற்காக மாநில அரசு. ரூ.1190.30 கோடி கூடுதல் செலவை ஏற்கும் சூழல் உருவாகும். கூடுதல் செலவை மாநில அரசு ஏற்க மறுத்தால்  விலையில்லா அரிசி கிடைக்காது என்பதுடன், ஒரு கணிசமான பகுதிக்கு அரிசி மலிவு விலையில் கூடக் கிடைக்காது. இது மாநிலங்களின் மீது நிதி சுமையைத் தள்ளிவிடும் போக்கு. மத்திய அரசு பின்பற்றும் நவீன தாராளமய கொள்கையின் ஒரு விளைவு.

மின்சார வாரியம்:

நவீன தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்திற்கு பின்னர், மத்திய அரசு பல்வேறு பாதகமான திட்டங்களை மாநிலங்களின் மீது சுமத்திவருகிறது. குறிப்பாக  மின்சார சட்டம் 2003, மின்கொள்கை 2005 மற்றும் மின்சார சட்டத்திருத்த மசோதா 2015, உதய் திட்டம் (உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா) ஆகியவற்றை சொல்லலாம். மத்திய அரசின் கொள்கை மாற்றங்களால் தான், மின் உற்பத்தியில் பொது முதலீடு குறைந்தது. தனியாரிடம் அதிக விலையில் மின்சார கொள்முதல் செய்யப்பட்டு, மின் வாரியக் கடன்கள் மலைபோல் அதிகரித்தன. நாடு முழுவதும் மின் துறை கடன் 2013 - 2015 இரண்டாண்டுகளில் ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ. 4.5 லட்சம் கோடியாக அதிகரித்தது. 
தமிழகத்தில் 2015ம் ஆண்டு முடிய மின் விநியோகக் கழகத்தின் மூலமான வருவாய் இழப்பு மட்டும் ரூ.81782 கோடி. உதய் திட்டத்தை ஏற்பதன் மூலம் மத்திய அரசின் நிதி உதவி எதுவும் மாநிலங்களுக்கு கிடைக்காது.  3/4 இழப்பில் ¾ பங்கை மாநில அரசும், ஙு1/4  பங்கைத் தமிழக மின் வாரியமும் ஏற்க வேண்டும் என்ற இலவச ஆலோசனையே வழங்கப்பட்டிருக்கிறது. இதில் இணைந்தால் தான் இதர மின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி கிடைக்கும் என்ற அச்சுறுத்தலுக்கு மாநில அரசு இரையாகி உள்ளது. குதிரை குப்புற தள்ளி குழியையும் பறித்த கதையாக, மோசமான மின் துறை கொள்கைகளால் நஷ்டத்தை ஏற்படுத்தி, அதை ஈடுகட்ட உதவி கேட்டால் மேலும் பாதிப்புக்கு வழி செய்யும் சூழலையே மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. மின் துறை சீர்திருத்தம் என்ற பெயரில் மேலும் தனியாருக்குக் கதவைத் திறக்கிற ஏற்பாட்டினை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமே இதன் நோக்கம்.

மொத்தத்தில் மின் துறை சேவையை முழுமையாக சந்தை சரக்காக மாற்றும் ஆலோசனைகளே உதய் திட்டத்தில் நிறைந்துள்ளன. இத்திட்டத்தை எதிர்த்துவந்த தமிழக அரசு தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டிருப்பது மின் வாரியத்தை மேலும் சீரழித்து, கட்டண உயர்வுகளை மக்கள் தலையில் சுமத்தும்.

நீட் தேர்வுகள்:

மருத்துவக் கல்விக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவு தேர்வு என்பது தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்பதையும், மருத்துவ உயர்கல்விக்குள் நுழைவதையும் பாதிக்கும். நீட் தேர்வுகளுக்கு எதிராக மருத்துவர்களும், மாணவர்களும் குரல் எழுப்பிவருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்த்து வருகின்றன. ஏற்கனவே அதிமுக அரசும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நுழைவுத்தேர்வு சிறப்பு வகுப்புகளை நடத்த ஒப்புக் கொண்டிருப்பதன் மூலம் முன்னதாக எடுத்த நிலைபாட்டில் அரசு பிறழ்ந்திருக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

•இச்சூழலில் மாநில நலன் காக்கும் இது போன்ற விஷயங்களில்  கொள்கை முடிவுகள் மாற்றப்பட்டிருப்பதன் விளக்கத்தைத் தமிழக மக்களுக்கு அளித்திட வேண்டும்

•அனைவருக்குமான விலையில்லா அரிசி திட்டம் தொடர வேண்டும்

•மத்திய அரசு தவறான கொள்கைகளைத் திணிப்பதை ஏற்க  மறுக்கும் மாநில அரசுகளை அணுகி, மத்திய அரசின் மீது ஒருங்கிணைந்த நிர்ப்பந்தத்தை உருவாக்கும் முன் முயற்சியை எடுக்க வேண்டுமென‌ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic