தலாக் பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பூ சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து சமுத்திரகனி நடிக்கும் ஆண்தேவதை பட தயாரிப்பாளர் பக்ருதீன் தனது முகநூலில் கூறியுள்ளதாவது, ” முஸ்லிம்களில் சிலர் இருக்கின்றனர். இஸ்லாத்தைப் பற்றியோ அல்லது தாங்கள் சார்ந்த இயக்கங்களை பற்றியோ ஏதேனும் முரணான கருத்துக்களை யாரேனும் கூறினாலோ அல்லது மாற்றமாக நடந்து கொண்டாலோ உடனே அவர்களை பற்றி சகட்டுமேனிக்கு தனிபட்ட கருத்துக்களை கூறக்கூடியவர்களாக எழுதக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
அவ்வாறு எதிராக விமர்சிக்கக் கூடியவர்கள் முரணாண கருத்துக் கூறியவருக்கு சரியான கருத்தை தெரிவித்தார்களா என்றால் அதுவும் கிடையாது. இது எத்தகைய போக்கு என்று தெரியவில்லை. இத்தகைய விமர்சனத்திற்கு தற்போது நடிகை குஷ்பூ அவர்களும் ஆட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
யாரேனும் அவரை சந்தித்தோ அல்லது தொடர்பு கொண்டோ அவர் கூறிய கருத்துக்கு மாற்றமான உண்மையான கருத்தை தெரிவித்தார்களா என்றால் எனக்கு தெரிந்து அதுவும் நடக்கவில்லை. இத்தகைய போக்கு தவறானதாகும் என்பதை சம்பந்தபட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே நேரடியாக சந்தித்து விளக்கமளிக்க முயற்சி செய்யுங்கள் அல்லது உண்மையான கருத்தை மறுப்பாக பதிவு செய்யுங்கள். வீண் தர்க்கங்களும் தனிபட்ட விமர்சனங்களையும் தவிர்க்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments