Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 3, 2016

பிரதமர் மோடியை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்..!

stop criticizing modi says fadnavis
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதை சிவசேனை கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு விமர்சித்தால் சிவசேனைக் கட்சிக்குதான் அவப்பெயர் ஏற்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு புதன்கிழமை அளித்த நேர்காணலில் கூறியதாவது:
பிரதமர் மோடியை விமர்சித்தால், சிவசேனை கட்சிக்குதான் அவப்பெயர் ஏற்படும். அவ்வாறு பேசுவதை மக்கள் விரும்பவில்லை. எனினும், அக்கட்சியினரின் விமர்சனத்தை ஏற்று உரிய பதிலை அளிக்க நான் தயாராக உள்ளேன். ஆட்சி புரிவதும், அரசியலும் வேறு, வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரதமரை விமர்சிப்பதை சிவசேனை கைவிட வேண்டும். மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் மக்களின் கோபத்தைத் தூண்டி விட்டு அரசியல் ஆதாயமடைய சில கட்சிகள் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள்) முயலுகின்றன. ஆனால், போராட்டத்தை நடத்துபவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.

மராத்தா சமூகத்தினர் தங்களது கோரிக்கைகளை மட்டுமே வைக்கின்றனர். அதனால், தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் உள்பட பிற சமூகத்தினர் பெறும் ஆதாயங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மராத்தா சமூகத்தினரின் நியாயமான கோரிக்கைகளுக்கு எனது அரசு செவிசாய்க்கும் என்று ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத் தள்ளுபடி திட்டத்தால் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் ஆதாயம் பெறுவார்கள். பாஜகவும், சிவசேனையும் இருவேறு கட்சிகளாகும். ஆட்சி நடைமுறை குறித்து எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு உள்ளது. எனினும், எங்கள் கூட்டணி அரசு பதவிக்காலம் முடியும் வரை நீடிக்கும்.

"ஏ தில் ஹை முஷ்கில்' திரைப்படத்தை வெளியிட மகாராஷ்டிர நிர்மாண் சேனையின் தலைவர் ராஜ் தாக்கரே ரூ.5 கோடி கேட்டது, தேசிய ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டது. ஆனால், அந்தப் பிரச்சினையை நான் சுமுகமான முறையில் தீர்த்து வைத்ததாகவே அனைவரும் கருதுகின்றனர்.

விதர்பா தனி மாநில விவகாரம், மத்திய அரசின் வரம்புக்கு உள்பட்டதாகும். என்னைப் பொறுத்தவரை, விதர்பா, மராத்வாடா உள்பட ஒட்டுமொத்த மாநிலமும் சரிசமமான வளர்ச்சியடைய வேண்டும் என்றே கருதுகிறேன் என்றார் தேவேந்திர பட்னாவீஸ்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic