Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 3, 2016

நீதிக்காக ஏங்கும் சீக்கியர்கள்!

sikh riots victims yet get justice

இந்திரா காந்தி படுகொலையை அடுத்து டெல்லி உட்ப‌ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்று நீதித்துறை வல்லுநர்களும், சீக்கிய அமைப்பினரும் கூறியுள்ளனர்.

1984-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்கள் இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த இருவரும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. இதில் சுமார் 2,800 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மீது வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு நீதி கேட்டு போராடி வரும் சீக்கிய அமைப்பு சார்பில் கலவரத்தில் உயிரிழந்தோரின் 32-வது ஆண்டு நினைவு தினம் டெல்லியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இதில் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அனில் தேவ் சிங் பேசியதாவது, "சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் அரசு அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டனர். வன்முறையாளர்களை ஒடுக்க எந்த நடவடிக்கையையும் முறையாக எடுக்கவில்லை. கலவரம் தொடர்பான வழக்குகளின் சாட்சிகளுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. அந்த கலவரத்தைத் தூண்டியவர்களுக்கும், கலவரத்தில் ஈடுபட்டோருக்கும் உரிய தண்டனை கிடைக்க வேண்டும்" என்றார்.

இந்தியாவைப்பொறுத்தவர லட்சக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகிறது. குற்றம் செய்தவர்கள் பலரும் சுக போக வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு மறைகின்றனர். ஆனால் நீதி மட்டும் தாமதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. வழக்கு தொடுத்தவர்களும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் உலகத்தை விட்டு மறைந்து போக அந்த வழக்கின் வீரியங்கள் நீர்த்துப்போய்விடுகிறது என்பதே நிஜம்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic