Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 2, 2016

அது அவரது சொந்த கருத்து! இப்ப சொன்னது யார் தெரியுமா?

kushboo supports uniform civil code
கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தங்களது கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக ஏதாவது கருத்து தெரிவித்துவிட்டால் அது உடனே அது அவரது சொந்த கருத்து என்று சொல்லி ஈசியாக தப்பித்துக்கொள்வார்கள். இந்த 'சொந்த கருத்து' நோய் இது நாள் வரை பா.ஜ.கவின் தலைவர் தமிழிசைக்கு மட்டுமே தொற்றியிருந்தது. தற்போது அது பரவ ஆரம்பித்து காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசரையும் பாதித்துள்ளது.



இதனால் நெட்டிசன்கள் தமிழிசை சவுந்தரராஜனை கடுமையாக கலாய்த்து எடுத்தனது. தற்போது நெட்டிசன்கள் கையில் திரு நாவுக்கரசரும் சிக்கிவிட்டார்.

மத்திய அரசு கொண்டு வர நினைக்கும் பொது சிவில் சட்டத்துக்கு குஷ்புவின் ஆதரவு கருத்துக்கு, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் எதிர்த்தும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பும் தெரிவித்து உள்ளனர்.

சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்னிப்பரிட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பூ, ”பாஜக கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்தை ஆதரித்தும், அது நாட்டுக்கு தேவை” என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர், குஷ்பூ கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்தல்ல. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார்.

இந்நிலையில் குஷ்புவின் கருத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், ”பொது சிவில் சட்டத்தை குஷ்பு ஆதரித்திருப்பது வரவேற்கத்தக்கது. மாற்றுக்கட்சிகளில் இருந்தாலும் அவர் வரவேற்றிருப்பது நல்ல வி‌ஷயம்.

மேலும், குஷ்புவை பொறுத்தவரை இஸ்லாமிய சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர். பெண்களின் நிலையை நன்றாக உணர்ந்தவர். பொது சிவில் சட்டம் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். எனவே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எல்லோரும் வரவேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic