Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 2, 2016

திப்பு ஜெயந்தி கொண்டாடுவதில் உறுதி..! - கர்நாடக அரசு

tippu jayanthi

திப்பு சுல்தான் கி.பி.1782 முதல் 1799-ம் ஆண்டு வரை மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்தார். வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கிய திப்பு சுல்தானின் ஆட்சி காலத்தில் மைசூரு மாகாணத்தின் எல்லை பன்மடங்கு பரந்து விரிந்தது. போர்க்கலையில் சிறந்து விளங்கியதால் திப்பு சுல்தான் ‘மைசூரு புலி’ என அழைக்கப்பட்டார். வெள்ளையர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்திலும் ஈடிணையற்று போராடினார்.

இந்நிலையில் திப்பு சுல்தானின் பிறந்த நாளை, கடந்த ஆண்டு கர்நாடக அரசு முதல் முறையாக அரசு விழாவாகக் கொண்டாடியது. இதனை கண்டித்து பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் பேரணி நடத்தின. அப்போது வன்முறை வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கர்நாடக அரசு மீண்டும் திப்பு சுல்தானின் பிறந்த நாளான நவம்பர் 10ஆம் தேதி ”திப்பு ஜெயந்தி” என்ற பெயரில் அரசு விழா கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது.

இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தளம், சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திப்பு சுல்தானின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடக் கூடாது. இதை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்’’ என்றும் அறிவித்துள்ளனர்.

இதற்கு பதிலடி அளித்துள்ள கர்நாடக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் ரோஷன் பெய்க், ” மைசூருவை ஆண்ட திப்பு சுல்தான் கர்நாடகாவின் வளர்ச்சிக்கும், கன்னட மொழியின் வளர்ச்சிக்கும் கடுமையாக உழைத்தார். சுதந்திர போராட்டத்தின் துவக்கக் காலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக திறம்பட போரிட்டார். ஏராளமான இந்து கோயில்களுக்கு நிலம், நகை, பணம் உள்ளிட்டவைகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். எனவே அவரது பிறந்த நாளை மத விழாவாக அல்லாமல் கலாச்சார விழாவாக கொண்டாடுவதில் அரசு உறுதியாக இருக்கிறது’ என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic