Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 6, 2016

கொலை மிரட்டலுக்கு நடவடிக்கை எடுக்க சி.பி.எம் கட்சி வலியுறுத்தல்!

G Ramakrishnan cpim party tamilnaduகேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் மற்றும் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளுக்கு எதிராக வந்த கொலை மிரட்டல் கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக விவசாயிகள் சந்திக்கிற முக்கிய பிரச்சனைகளான விவசாயத்தை பாதுகாப்பது, விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கொடுப்பது, வறட்சி நிவாரணம் வழங்குவது, விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் சட்டத்தை கைவிடுவது, கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வருடத்திற்கு 200 நாள் வேலை மற்றும் தினக் கூலியாக ரூ. 300/- வழங்குவது, ஆதிவாசி மக்களின் உரிமைகளை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி மத்திய அரசை வலியுறுத்தி நான்கு முனைகளிலிருந்து  விவசாயிகளின் நாடு தழுவிய பிரச்சார பயணம் விவசாய சங்கத்தின் அகில இந்திய தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்கள் தலைமையில் புதுதில்லி நோக்கி நடைபெறுகிறது. நவம்பர் 24, 2016 அன்று நாடாளுமன்றம் முன்பு பல லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் பேரணி - ஆர்ப்பாட்டம்  நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 2016 நவம்பர் 10-ந் தேதியன்று துவங்கும் பிரச்சார பயணத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் உரை நிகழ்த்தி தொடங்கி வைக்கிறார்.  முன்னதாக நவம்பர் 9, 2016 அன்று நாகர்கோவிலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அதுபோல் மாவட்டத்தின் பல மையங்களில் வரவேற்பு கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குமரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சங்கத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் நிகழ்ச்சிக்கான பணிகளை முன்னின்று செய்து வருகிறார்கள்.
 
இந்த பிரச்சார பயணக்குழு நிகழ்ச்சிகளை சீர்குலைக்கும் வகையிலும், நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னின்று செய்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத்தின் ஊழியர்களை அச்சுறுத்தும் வகையிலும் கட்சியின் மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை ஆகிய வட்டாரக்குழு அலுவலகங்களுக்கு  ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பு சங்பரிவார் அமைப்புகள் சார்பில் பெயர், முகவரியில்லாமல் கொலைமிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கட்சி அலுவலகங்களை தகர்ப்போம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குமரி மாவட்டத்தில் துடைத்தெறிவோம்,  சங்பரிவாரிடம் மோத வேண்டாம் என கேரள முதல்வருக்கு எச்சரிக்கையும், பகிரங்க மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட கட்சி கமிட்டிகள் சார்பில் புகாரும் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடமும் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் இதுவரை குறிப்பான எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. குமரி மாவட்ட காவல்துறையின் இந்த மெத்தனப்போக்கு பாஜக - சங்பரிவார் அமைப்புகளின் வன்முறை செயலுக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையாக உள்ளது.

எனவே இப்பிரச்சனையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, கொலைமிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் கடிதம் எழுதிய நபர்களை கண்டுபிடித்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், கேரள முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சார பயண தொடக்க நிகழ்ச்சிகள் எவ்வித இடையூறுமின்றி நடைபெறுவதற்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic