விண்ணுக்கு இருபது செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் அனுப்பும் வல்லமை மிக்க நாடாக உலக அரங்கில் வீர நடைபோடும் இந்தியா, கடந்த கால் நூற்றாண்டில் பல துறைகளில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக ஏவுகனை தொழில் நுட்பம், ஆஸ்கர் விருது, மின்னஞ்சல் கண்டுபிடிப்பு, உலக பணக்காரர்களின் பட்டியலில் இந்தியர்கள், அணு ஆயுத சோதனை வெற்றி, பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இந்தியாவிற்கு வந்தது, இந்திய வம்சாவளியினரின் சாதனை, விளையாட்டு வீரர்களின் உலக சாதனைகள் ஆகியன கடந்த கால் நூற்றாண்டில் நடந்தவை.
உலக நாடுகளிடையே வல்லரசு நாடுகளுக்கு இணையாக மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவின் பெருமை ஒருபக்கம் இருக்க, மறுபக்க அதன் கருப்புப்பக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இந்தியாவின் கருப்பு பக்கங்களில் முதல் பத்து இடத்தில் தனக்கெனத் தனி இடத்தைப் பெற்றிருப்பது சேரிகள் தான். எந்த இடம் வாழ்வதற்குத் தேவையான போதிய இட வசதி, தூய்மையான காற்று, சுகாதார வசதி, குடி நீர், கழிப்பறை, மின் வசதி ஆகியன இல்லாதிருக்கின்றதோ அது தான் சேரி. கழிவுகளுக்கு மத்தியில் அமர்ந்து உணவு உட்கொள்ளும் மக்கள், குறுகிய வீட்டில் அதிகமாக மக்கள் வசிப்பது, சாக்கடைகள் மீது ஓடி விளையாடும் குழந்தைகள், சுகாதாரமற்ற குடி நீர், பொது இடத்தில் சுயதேவைகளை நிறைவேற்றும் மக்கள் நிறைந்திருக்கும் இடம் தான் சேரி.
உலகின் மிகப்பெரிய சேரி, ஆசியாவின் பிரம்மாண்டமான அளவுக்கு மக்கள் அதிகம் வசிக்கும் சேரி என்ற பெயர் பெற்றிருப்பது மும்பை மாநகரத்தில் உள்ள தாராவி சேரிதான். இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை. சேரிகள் நமது நாட்டின் நவீனகால சிறைக்கொட்டகையாகவும், தீண்டாமைக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றன. மனிதர்கள் வாழத்தகுதியில்லாத இடத்தில் பல ஆண்டுகளாக வாழும் இம்மக்களைப்பற்றியும் அங்குள்ள நிலையை பற்றியும் செய்தித்தாள்கள் மூலம் அறிந்திருப்போம். ஆனால் அது நம்மை ஒரு செய்தியாகக் கடந்து சென்றிருக்குமே தவிர, அவர்களுடைய மறுவாழ்வு பற்றி நாம் சிந்தித்து இருக்க மாட்டோம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தகவல் தொழில் நுட்பமும், தொழிற்சாலைகளும் செழித்து கிடக்கும் மும்பை மாநகரத்தின் நடுவே கருப்பு மையமாக இருப்பது தாராவிதான். தாராவியை தவிர அதனைச் சுற்றி இருக்கும் அனைத்து இடங்களும் வானளாவ கட்டிடங்களையும் பரபரப்பான மக்களையும் கொண்டிருக்கிறது.
ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கி இருக்கும் மக்கள் தாராவி வழியே செல்லும் போது மூக்கை மூடிக்கொண்டும், அந்த இடத்தைப் பார்க்க விரும்பாமல் செல்லும் நிகழ்வுகளும் வழக்கமானவை.
அப்படி என்னதான் அந்த தாராவியில் இருக்கிறது? அங்குள்ள மக்களின் நிலை என்ன? என்பதை அறிய தாராவியில் நுழைந்தோம். முதலில் நம் கண்ணுக்குத் தென்படுவது குறுகிய வீதிகளும், அதனை ஒட்டி அமைந்துள்ள சிறிய சிறிய வீடுகளும், பரபரப்பாக தங்களின் வேலைகளின் ஈடுபட்டிருக்கும் ஆண்களும், வீதியில் அடுப்பு மூட்டி சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பெண்களும், சாக்கடை, கழிவு, குப்பை கூளம் என்று கூட பார்க்காமல் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளும்தான்.

சேரி என்பதால் வீசும் காற்றில் துர்நாற்றம் அதிகம். அது நம் மூக்கைத் துளைக்கும்போது அந்த இடங்களை அருவருக்கத்தக்க ஒன்றாக கருதவைக்கும். அது அவர்களுக்கு பழகிப்போன ஒன்று.
சுமார் 500 ஏக்கர் வரை பரவி இருக்கும் தாராவியின் மக்கள் தொகை எவ்வளவு என்பது துல்லியமாக இன்றளவும் எந்த அரசுப் பதிவேட்டிலும் இல்லை. இருந்த போதிலும் பெரும்பான்மையான ஆவணங்கள் தாராவியின் மக்கள் தொகை 5 லட்சம் முதல் 10 லட்சத்திற்குள் இருக்கும் என்று கூறுகின்றன. இதுவே உலகில் குறுகிய இடத்தில் அதிக மக்கள் வாழும் இடமாக கருதப்படுகிறது. இங்கு வாழும் 60% மக்கள் தாராவியில் கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். 2,10,00,000 மக்கள் வாழும் மும்பை மாநகரத்தின் 62% மக்கள் தாராவி போன்ற பல்வேறு சேரிகளில் வாழ்ந்து வருகின்றனர் என்பது வேதனையான செய்தி.

தாராவிக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது. மும்பை நகரம் என்பது கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மையமாக இருந்து வருகிறது. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவை அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயன் மும்பை மாநகரத்தில்தான் தனது கிழக்கு இந்திய கம்பெனியை நிறுவத் தொடங்கினான். மும்பை நகரம் அற்புதமான புவியியல் அமைப்பை கொண்டதால் இது வணிகப் போக்குவரத்துக்குச் சிறந்ததாக கருதிய ஆங்கிலேயன், மும்பையை அதிக கவனம் கொண்டு ஆக்கிரமிக்கத் தொடங்கினான்.
அன்றைய மும்பை மக்கள் தொகை என்பது லண்டன் மக்கள் தொகையை விட பத்து மடங்கு அதிகம். மும்பை கடும் மக்கள் நெரிசல் மிகுந்த இடமாக இருந்தது. அப்போது மும்பையை வீட்டு வசதி குறைபாடு, குடி நீர் பற்றாக்குறை, சுகாதாரக் கேடு போன்றவை வாட்டின. இருந்த போதிலும் ஆங்கிலேயர்கள் குடியிருப்புகளை மட்டும் மும்பையில் தனியாக கட்டினர். ஆள வந்தவன சுகபோக குடியிருப்புகளிலும், மண்ணின் மைந்தர்கள் சுகாதாரமற்ற ஒதுக்குப்புற இடங்களிலும் வசிக்க நேர்ந்தது.
அன்றைய மேற்குலக முதலீடுகளைக் கவர மும்பையை இரண்டு கூறாக பிளந்து அதில் ஒன்றை ஆடம்பர நகரமாகவும், மற்றொன்றை சுகாதாரமற்ற இடமாகவும் மாற்றினர். பின்னாளில் அது சேரிகளாக உருவாயின. இதுவே தாராவி என்னும் சேரி உருவான வரலாறு. பின் அந்தப் பகுதியைக் குறிவைத்து பல சாயப் பட்டறைகள், தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. முதல் தொழிற்சாலை தாராவியில் 1887ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதில் இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் வேலை செய்யத் தொடங்கினர். அதில் வரும் கழிவுகள் தாராவியின் வாழ்வாதாரத்தை மேலும் கேள்விக்குறியாக்கியது. அன்றைய காலகட்டத்தில் 2,00,000 மக்கள் காலரா, பிளேக் போன்ற கொடிய நோய்களால் இறந்தனர்.
பின்பு குஜராத், உத்தரப் பிரதேசம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலிருந்து மக்கள் இங்கு வந்து குடியேறத் தொடங்கினர். அன்றைய தாராவியில் மீன் பிடிப்புத்தான் முக்கிய தொழிலாக இருந்தது. இங்கு குறிப்பிடப்படவேண்டிய விஷயம், தாராவி அன்று ஒரு தீவாக இருந்தது.
இன்றைய தாராவியில் வாழும் மக்கள் மூன்று மத நம்பிக்கையை பின்பற்றுகின்றனர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம். இங்கு வசிக்கும் மக்களில் 60% இந்துக்கள், 33% முஸ்லிம்களும், 6% கிறிஸ்தவர்களும் இருக்கின்றனர். இம்மதங்களைச்சேர்ந்த மக்கள் ஒரு சில இடங்களைத்தவிர பல இடங்களில் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இருந்த போதிலும் அவர்கள் பிளவுபடாமல் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வழிபாட்டுத்தலம் தாராவியில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருக்கின்றது. முதல் மசூதி படீ மஸ்ஜித் தாராவியில் 1887ல் நிறுவப்பட்டது.

இங்கு வாழும் மக்களின் சராசரி வாழ் நாள் 60 ஆண்டுகளாக இருக்கின்றன. போதிய அளவிற்கு கழிப்பறை வசதியில்லாததால் ஒரு கழிவறையை 1500க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பல தங்களுடைய சுயதேவைகளை ஏரிகள் ஓரமாகவோ, ஆற்றின் படுகையிலோ, சேரியின் நடுவிலோ நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
தாராவியில் வசிக்கும் சிலர் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து குடியேறியவர்கள், அதேபோல் தமிழ்கத்தில் இருந்த் 1920களில் பலர் தாராவியில் குடியேறினர். இங்கு தமிழர்களுக்கு என்று பள்ளிக்கூடம் 1924ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. இதில் 50ற்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அதிக மக்கள் நெரிசல் காரணமாக இங்கு ஆடம்பர அல்லது வசதியான வீடுகள் எதுவும் கிடையாது. ஒரே அறையைக்கொண்ட வீட்டில் அதிலும் ஐந்திற்கும் குறையாத குடும்பத்தினர் வசிக்க வேண்டும். சமையல் அறை, வரவேற்பறை, குளியலறை என்று எதுவுமே கிடையாது. எல்லாமே பொது இடங்களில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
தீப்பெட்டிப்போல் வரிசையாக அடுக்கி இருக்கும் தாராவி மக்களின் வீடுகள் எல்லாம் தகரத்தால் ஆனவை. வெயில் காலத்தில் வீட்டின் உள்ளே வெப்பம் சுமார் 45 ஃபாரன் ஹீட் இருக்கும். அரசு வெளியிட்ட தகவல்படி தாராவியில் உள்ள 70%க்கும் அதிகமான வீடுகள் சட்டத்திற்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
இங்குள்ள மக்களுக்கு தண்ணீர் வசதிகள். எம்.சி.ஜி.எம் மூலம் கொடுக்கப்படுகிறது. இடையில் ஏற்படும் தண்ணீர் திருட்டு, குழாய்களில் உள்ள துளைகள் மூலம் வீணாகும் தண்ணீர், சட்ட விரோத தண்ணீர் இணைப்புகள் மூலம் தாராவிக்கு வரும் தண்ணீர் அளவு நிர்ணயித்ததை விட குறைவாகவே வந்து சேர்கிறது. மிகவும் வியப்பான விசயம் என்னவென்றால், இங்கு வாழும் மக்களின் தொழில்கள்தான். இங்கு வசிக்கும் மக்களின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் மூக்கில் விரல் வைப்பீர்கள். அது எவ்வளவு என்றால் ஒரு பில்லியன் டாலர்கள். உலகில் உள்ள சேரிகளில் இல்லாதது இந்தச் சேரியில் இருப்பதும் இதன் தனிச்சிறப்புகளும் நம்மை மலைக்க வைக்கிறது.
1040 துணிக்கடைகள், 590 தோல் பட்டறைகள், 500 எம்ப்ராய்டரிகள், 120 உணவகங்கள், 740 பொருள்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்கூடங்கள் என்று தாராவியில் மொத்தம் 7000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிலையங்கள் இருக்கின்றன. இப்படி பல தொழில் நிலையங்களையும் பல்லாயிரக்கணக்கான உழைப்பாளிகளையும் உள்ளடக்கிய சேரிதான் தாராவி.
இதுமட்டுமின்றி, 15,000க்கும் அதிகமான குடிசைத் தொழில்கள் தாராவியில் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள மக்கள் எப்பொழுதும் சோம்பேறியாக இருந்தது கிடையாது என்று சொல்லும் அளவிற்கு மிகக் கடினமாக உழைக்கும் குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
கூலி வேலை செய்யும் தாராவி மக்கள் ஒரு நாள் கூலியாக பெறுவது 150 ரூபாய் தான். இதனைக் கொண்டுதான் இன்றளவும் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை சமாளித்து வருகின்றனர். தாராவி மக்களில் ஆண்கள் மட்டுமே வெளி வேலைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகமான பெண்கள் வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே குறிப்பிட்டது போல இங்கு அதிக மக்கள் தோல் பட்டறை, மண்பாண்டம் செய்வது, துணிக்கடை, பிளாஸ்டிக், இரும்புப் பட்டறைகள் ஆகியவற்றில்தான் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் ஆண்டு வருமானம் மட்டும் 665 மில்லியன் டாலர் ஆகும்.

தாராவியில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு தொழில், மறுசுழற்சி செய்யும் தொழில் பட்டறைகள்தான். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பயனற்றது என்று கருதி வீசப்படும் பொருள்கள் தாராவியில் மறுசுழற்சி மூலம் மறுவடிவம் பெறுகிறது. காகிதம், பிளாஸ்டிக், தோல், அலுமினியம், கண்ணாடிகள் போன்றவை இங்கு மறுசுழற்சி செய்யப்பட்டு புதிய பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதுமட்டுமின்றி, 90களில் பயன்படுத்தப்பட்ட ஒலி நாடாக்கள், வீடியோ கேசட்டுகள் இங்கு மறுசுழற்சி செய்யப்படுகிறது. நட்சத்திர விடுதிகளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டு வீசப்படும், சோப்புகள், துணிகள், துண்டுகள் கூட இங்கு மறுசுழற்சி செய்யப்பட்டு புதிய சோப்பு களாகவும், ஆடையாகவும மறுவடிவம் பெறுகிறது. அசுத்தமாக இருக்கும் தாராவி தூய்மைக்கான பெரும் புரட்சியை ஓசையின்றி செய்து வருகிறது.
போதிய பாதுகாப்புக் கருவிகள் இன்றி இங்கு வேலை செய்யும் மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். கொல்லன் பட்டறையில் கடும் வெப்பத்தில் வேலை செய்பவர்களுக்கு குளிர் சாதன வசிதி கிடையாது. நெருப்பில் வேலை செய்பவர்களுக்கு பாதுகாப்புக் கவசம் எதுவும் கிடையாது. பிளாஸ்டிக், துணிகள் தயாரிக்கும் கூடங்களில் வெளிவரும் சிறிய அளவு தூசி துகள்கள் அங்கு வேலை செய்பவர்களின் மூச்சு குழாய்க்குச்சென்று சுவாசக் கோளாறை உருவாக்குகிறது. நோய்களில் கஷ்டப்படும் மக்களுக்கு முகமூடி கிடையாது, கரும் புகையில் வேலை செய்பவர்களுக்கு மூக்கில் அணிய சிறப்பு முகமூடி கிடையாது.
பல கோடிகள் ஆண்டு வருமானமாக ஈட்டும் தொழில் கூடங்கள் நிறைந்து இருக்கும் தாராவி, இது போன்ற சாதனங்கள் இன்றி செயல்படுவது தனி மனித சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இருந்தும் அதனை விட்டால் அவர்களுக்கு வேறு வாழ்வாதாரம் எதுவும் கிடையாது. இங்கு தயாரிக்கும் பொருள்கள் மகாராஷ்டிரா மட்டுமின்றி, இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆடை, பிளாஸ்டிக் போன்ற சில பொருள்கள் உலக நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2015க்கு பின்பு இங்குள்ள 200க்கும் மேற்பட்ட தொழில் கூடங்கள் தங்களுடைய பொருள்களை விற்க இணையதளத்தை பயன்படுத்தத் தொடங்கினர். ஆன்லைன் வர்த்தகத்தில் தாராவியின் பல தொழில் முனைவோர் நுழையத் தொடங்கினர். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் தாராவியின் தொழில் முனைவோருக்கும் மிகவும் பயனாக உள்ளது.
நவீன அலைப்பேசிகளில் பெண்கள் பாதுகாப்புக்கு பிரத்தியேகமான செயலியை தாராவியில் வாழும் பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். அதே போல் தண்ணீர் சம்பந்தமான ஒரு செயலியையும் ஆரம்ப பள்ளியில் மழலைகளுக்கு என்று ஆங்கிலம், இந்தி வார்த்தைகளையும் எளிய கணக்குகளையும் அடக்கிய செயலியையும் தாராவியின் மாணவிகள் வடிவமைத்தனர். இது மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. தாராவியில் வசிக்கும் இளைஞர்கள் ஹிப் ஆப் எனும் நடனத்தில் மிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதில் ஆகாஷ் தனகர் என்பவர் இப்படி ஆர்வமாக உள்ள இளைஞர்களுக்கென்று ஒரு நடனக் குழுவை உருவாக்கி இவர்களை உலகப் புகழ் பெற்ற ஹிப் ஆப் நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடும் சூழலை ஏற்படுத்தியுள்ளார். இவர்களுடன் டோக்யோ சரசா, சில்வர் பூம்பக்ஸ், கலிபோர்னியா மந்தீப் சேதி போன்றவர்கள் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
தாராவியில் ஆண்டுக்கு ஒரு முறை ஓவியத் திருவிழா நடைபெறுவது வழக்கம். மூன்று வாரங்கள் நடைபெறும் இவ்விழாவில் தாராவியில் வாழும் பலதரப்பட்ட மக்கள் தங்களுடைய ஓவியக் கலையை பறை சாற்றும் வகையில் பல ஓவியங்களை அதில் பார்வைக்கும் வைப்பார்கள். இதில் சிறந்தவைக்கு பரிசும் உண்டு. தொழில் புரட்சியில் புதிய பரிணாமத்தைக் கொண்ட தாராவிக்கு பலர் தொழிற் சுற்றுலா வருவதும் உண்டு. மக்கள் அதிக ஆர்வத்தோடு இங்கு வந்து தாராவியின் தொழிற் கூடங்களையும், பட்டறைகளையும் பார்வையிடுகின்றனர். இதே போல் தங்களுடைய பகுதிகளிலும் தொழிற்கூடங்களை அமைக்க பார்வையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தாராவி பகுதியை பல முன்னனி இயக்குனர்கள் தங்களுடைய திரைப்படங்களில் இடம் பெறச் செய்துள்ளனர். மும்பை திரைப்பட உலகம் தாராவியை மையமாகக் கொண்டு பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. அதில் சலீல் ஜாவித் இயக்கிய தீவார், மீரா நாயர் இயக்கிய சலாம் பாம்பே, விது வினோத் சோப்ரா இயக்கிய பாரிப்டா, சுதிர் மிஸ்ரா இயக்கிய 'தாராவி', ராம் கோபால் வர்மா இயக்கிய 'இந்தியன் காங்ஸ்டர் டிரைலோஜீ' ஆகியவை மிக பிரபலம்.
அதேபோல் மாற்றுமொழித் திரைப்படங்களும் தாராவியிலும், தாராவியை மையமாகக் கொண்டும் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்த் திரைப்படங்கள், இயக்குனர் மணிரத்தினத்தின் ' நாயகன்'. 'பம்பாய்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் தாராவியில் வசிக்கும் தமிழ் மக்கள் பற்றிய திரைப்படமாகும்.
அதேபோல் உலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்த 'ஸ்லம் டாக் மில்லியனரி' தாராவியில் தான் எடுக்கப்பட்டது. இதில் நடித்த சில குழந்தைகள் தாராவியில் பிறந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுகாதாரமற்ற நிலை காரணமாக தாராவியில் கடந்த 25 ஆண்டுகளாக கடுமையான நோய்கள் தாக்கி பல ஆயிரம் மக்கள் இறந்துள்ளனர். சில ஆண்டுகளாக தாராவியை வாட்டி வதைப்பது வயிற்றுப்போக்கும், வைரஸ் நோய்களும்தான். போதிய மருத்துவ வசதிகள் தாராவியில் இல்லாததால் பல குழந்தைகள் இறந்துள்ளன. இதைத்தவிர தாராவியை பதம் பார்த்தது 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தும், 2005ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும்தான். இதில் அதிகமான உயிர், பொருள் சேதங்கள் ஏற்பட்டன.
இத்தகைய சமூக பண்பாட்டை கொண்ட தாராவி போன்று பல சேரிகள் இந்தியாவில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வதாகக் கூறி அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதைவிட அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யட்டும். மறுவாழ்வு என்ற பெயரில் நகரத்தின் ஒரு ஓரத்தில் வீடு கட்டிக்கொடுத்துவிட்டால் இது முடிந்துவிடாது. தாராவி மக்களுக்கு அரசு தொழில் வாய்ப்புகளையும், ஊக்கத்தொகையையும் கொடுக்க வேண்டும். தாங்கள் வாழும் இடங்களில் சுகாதாரம் கிடைக்க, முதலில் அரசு அங்கு கொட்டப்படும் குப்பைகளையும், கழிவு நீர் குழாய்களையும் மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். நாளைய தலைமுறைக்கும் தரமான கல்வியை கொடுத்தால் அவர்களின் சமூக மாற்றத்திற்கு வித்தாக அமையும். சேரிகள் இல்லா தேசம் அமைய வேண்டும்.
- ஆரூர் யூசுப்தீன்
ஆன்லைன் ஊடக வாசகர்

No comments:
Write comments