Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 1, 2016

மீண்டும் இடஒதுக்கீட்டிற்காக குஜராத்தில் போராட்டம்! ஹர்திக் படேல் அறிவிப்பு!

hardik patel calls for protest demanding reservation in gujarath
குஜராத்தில் படேல் இனத்தவரின் இடஒதுக்கீடு போராட்டங்களால் ஏற்பட்ட கலவரங்கள் ஓய்ந்த நிலையில், வரும் 20ஆம் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக ஹர்திக் படேல் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குஜராத்தில் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் சமுதாயமாக விளங்கும் படேல் இனத்தவர் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரி, கடந்த ஆண்டு திடீர் போராட்டம் நடத்தினர். இதற்கு ஹர்திக் படேல் என்ற இளைஞர் தலைமை தாங்கினார். இது மிகப்பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகினர். இதையடுத்து ஹர்திக் படேல் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, படேல் இனத்தவரின் போராட்டத்தை சரியாக கையாள தவறியதால் முதல்வர் ஆனந்திபென் படேல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து  அவருக்கு பதிலாக விஜய் ரூபானியை முதல்வராக பாஜக‌ கொண்டு வந்திருக்கிறது. குஜராத்தில் 2018ஆம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் இப்போதே அதற்கு முனைப்பு காட்டி வருகின்றன.

காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்றவை படேல் இனத்தவரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவர்களின் வாக்குவங்கியை கைப்பற்ற முயன்று வருகின்றன.

இந்நிலையில், மீண்டும் தங்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தப் போவதாக படேல் இனத்தவர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ஹர்திக் படேல் உள்ளிட்ட 50ற்க்கும் அதிகமான படேல் இன தலைவர்கள் ஜங்வாத் கிராமத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.

இதன் பின்னர், ஹர்திக் படேல் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ‘‘படேல் இனத்தவர் அனைவரும் வருகிற 20ஆம் தேதி ராஜ்காட் மாவட்டத்தில் உள்ள பாயவ்தார் கிராமத்தில் கூடி மீண்டும் போராட்டத்தை தொடங்க வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.

படேல் இனத்தவர் மீண்டும் போராட்டத்தை தொடங்க போவதாக அறிவித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic