Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 29, 2016

நிர்வாண சாமியாரிடம் மன்னிப்பு கேட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள்!


இன்று ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஜெயின் நிர்வாண சாமியாரான தருண் சாகரை நேரில் சென்று சந்தித்து மன்னிப்பு கேட்டுகொண்டனர்.

ஹரியானா மாநில சட்டப்பேரவையில் கடந்த வாரம் ஜெயின் சாமியார் தருண் சாகருக்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்கு வந்த தருண் சாகர் முழு நிர்வாணமாக சட்டசபைக்குள் வந்து உரையாற்றினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளரான பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் விஷால் தத்லானி தனது டுவிட்டரில் கடுமையான முறையில் விமர்சித்தார். இந்த விமர்சனத்திற்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மறைமுகமாக கண்டித்தவுடன் தனது பதிவிற்கு மன்னிப்பு கோரினார் விஷால் தத்லானி.

இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜிர்வாலின் நம்பிக்கைகுரிய ஆலோசகர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் இன்ன பிற ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஜெயின் சாமியார் தருண் சாகரை சந்தித்து ஏற்பட்ட சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சத்யேந்தர் ஜெயின் கூறியதாவது "சுவாமிஜியை சந்தித்து நடந்தற்றிற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டோம். மன்னிப்பு மனப்பாங்கு கொண்டவர்கள் தான் ஜெயின் சமூகத்தினர். விஷால் தத்லானி கூறியவற்றை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தருண் சுவாமிஜி தெரிவித்தார்." என கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினும் ஜெயின் சமூகத்தைச்சேர்ந்தவர், மேலும் அவர் தருண் சாகரின் தீவிர பக்தராவார். தருண் சாகர் சாமியும் பத்திரிகையாளர்களிடத்தி தான் விஷால் தத்லானி கூறியவற்றை பெருந்தன்மையுடன் மன்னிப்பதாக தெரிவித்தார்.

முன்னர் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதோடு ஆம் ஆத்மி கட்சியுடனான அரசியல் தொடர்பிலிருந்தும் விலகுவதாக தெரிவித்திருந்தார் விஷால் தத்லானி. டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றபோது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டவர் விஷால் தத்லானி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic