Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 6, 2016

இங்கிலாந்து மக்களுக்கு எச்சரிக்கை

warning about weather climate to england people
பனியின் தாக்கம் இரவு நேரங்களில் உச்சத்தை அடையும் என்பதால் இங்கிலாந்து நாட்டு மக்கள் தங்கள் விழா கொண்டாட்டத்தை சீக்கிரம் முடித்து கொள்வது நல்லது என அந்த நாட்டின் வானிலை மையம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பாரம்பரியமாக "போன் ஃபையர் நைட்" என்னும் வானவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நவம்பர் மாதங்களின் இரவு நேரங்களில் நடைபெறுவது வழக்கமாகும். இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று அந்த நிகழ்ச்சிகளை சிறப்பிப்பார்கள்.

இந்த நிலையில் அங்கு பனியின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளிட்டுள்ள செய்தியில், காலை நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும், பின்னர் மாலை நேரம் ஆக ஆக குளிரின் தாக்கம் அதிகம் அடைந்து பின்னர் -5 டிகிரி செல்சியஸிலிருந்து -3 டிகிரி செல்சியஸாக குறைய கூட வாய்ப்புள்ளது.

இப்படி ஆவதால் பனி பொழிந்து மக்கள் இரவு நேரங்களில் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும். இதனால் மக்கள் போன் ஃபையர் நிகழ்ச்சியை நடு இரவு வரை கொண்டாடுவது சரியானதாக இருக்காது என வானிலை மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை பற்றி அங்கு வாழும் ஒருவர் கூறுகையில், மக்கள் கொண்டாட்டமான மனநிலையில் தற்போது இருக்கிறார்கள். ஆனால் வானிலை மையத்தின் எச்சரிக்கையையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic