தமிழக மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாத குஷ்புவை, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொள்ளவில்லை.
இதனால் கோபமடைந்த நக்மா, கூட்டத்தில் பேசும் போது, உழைக்கும் பெண்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் மனைவி, மகள், மருமகள், வீட்டில் வேலை செய்யும் பெண் என்ற அடிப்படையில் 'சீட்' கொடுக்கக் கூடாது.
பொது சிவில் சட்டம் குறித்து கருத்து சொல்ல, குஷ்புவுக்கு எந்த அருகதையும் கிடையாது. முஸ்லிமான அவர் சினிமாவில் பொட்டு வைத்து நடிக்கலாம் தவறில்லை. ஆனால், நிஜ வாழ்க்கையில் ஏன் பொட்டு வைக்கிறார். கேட்டால், இந்து மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறுவார்.
அப்படியெனில், முஸ்லிம் ஷரியத் சட்டம் பற்றி இவர் ஏன் கருத்து கூற வேண்டும். 'முத்தலாக்' பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் குஷ்புவுக்கு மாவட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
காலையில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வாராம், மாலையில் நடக்கும் மகளிர் காங்கிரஸ் கூட்டத்திற்கு வர மாட்டாராம். குஷ்புவின் நடவடிக்கைகள் குறித்து, கட்சி மேலிடத்தில் புகார் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

No comments:
Write comments