Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 17, 2016

என்னாச்சு ராம்குமார் மேட்டர்? மறந்தே போய்ட்டோமே....!

ஒவ்வொரு பிரச்சனைகளும் ஏற்படும் போது அதற்கு முந்தைய பிரச்சனைகளை முற்றிலுமாக மக்கள் மறந்தேவிடுவார்கள். இப்படி மக்கள் முற்றிலுமாக மறந்துபோன விசயம் தான் ராம்குமார் தற்கொலை - சுவாதி கொலை வழக்குகள்.

சுவாதி கொலை செய்யப்பட்ட தினத்திலிருந்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நாள் வரை தினம் தினமும் பத்திரிகைளை நிரப்பிக்கொண்டிருந்தது இவ்விருவருடைய செய்திகள். ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட பின்னர், வழக்கு உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரை சென்று பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான மினாட்சிபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அத்தோடு இவ்விவகாரம் மக்களின் மனதை விட்டு மறைந்துபோனது. தற்போது மக்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை கையில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எவ்வாறு மாற்றுவது என்பதுதான்.

ராம்குமார் விவகாரத்தில் ஆரம்பம் முதலே பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தி வந்த தமிழச்சி என்பவரின் சத்தமும்  நின்றுவிட்டது. மக்கள் முற்றிலுமாக ராம்குமார் விவகாரத்தை மறந்துவிட்ட நிலையில் மீண்டும் தமிழகச்சி கிழம்பியுள்ளார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் "ராம்குமார் உடல் மருத்துவ பரிசோதனை அறிக்கை 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். இத்தனை நாட்களாகியும் அரசு தரப்பு நடவடிக்கைகள் எதுவும் ஏன் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன?

ராம்குமார் வழக்கறிஞர் தரப்பு கூட 'கள்ள மெளனம்' காக்கிறது. அத்தனை முயற்சிகளையும் நசுக்கி ஒழித்த தமிழக காவல்துறை என்ற 'நச்சு பாம்பு' இன்னும் தமிழ்நாட்டிற்குள்தான் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை தமிழர்களும் மறந்து விட்டார்களே....

இவை எல்லாம் எப்படி சாத்தியமாகிறது தமிழகத்தில்....? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic